செய்தியாளர் அல்லாதோர் 'பிரஸ் ஸ்டிக்கர்' ஒட்டக்கூடாது

ஈரோடு:ஈரோட்டில் கலெக்டர் கந்தசாமி தலைமையில், 'காபி வித் கலெக்டர்' நிகழ்ச்சியில், ஈரோடு மாவட்ட செய்தியாளர், ஒளிப்பதிவாளர், போட்டோகிராபர்கள் பங்கேற்றனர்.


மாவட்டம் குறித்த சிறப்புகள் பற்றிய புத்தகங்கள், எழுத முன் வர வேண்டும். சுற்றுலாத்தலங்கள் குறித்து எழுதி, வெளிக்கொண்டு வர வேண்டும். பத்திரிகைகளில் வெளியாகும் செய்திகளை, சம்மந்தப்பட்ட துறைகளுக்கு அனுப்பி தீர்வு காணப்படுகிறது. அரசின் திட்டங்களை மக்களுக்கு கொண்டு சேர்க்க வேண்டும். பத்திரிகையாளர்கள் அல்லாதவர்கள், ஊடகம் என்ற ஸ்டிக்கர் ஒட்டினால், நடவடிக்கை எடுக்கப்படும், என கலெக்டர் தெரிவித்தார். கூட்டத்தில் பி.ஆர்.ஓ., சுகுமார், ஏ.பி.ஆர்.ஓ., கலைமாமணி உட்பட பலர் பங்கேற்றனர்.

Advertisement