அரசு பஸ் கண்டக்டர் மாரடைப்பால் இறப்பு
ராமநாதபுரம்: கரூரில் இருந்து ராமேஸ்வரம் சென்ற அரசு பஸ்சில் பணிபுரிந்த கண்டக்டர் ராஜேந்திரன் 56, மாரடைப்பால் உயிரிழந்தார்.
திண்டுக்கல் மாவட்டம் சீலப்பாடி போஸ்டல் காலனியை சேர்ந்தவர் ராஜேந்திரன். திண்டுக்கல் அரசு போக்குவரத்து கழகத்தில் கண்டக்டராக இருந்த இவர் நேற்று கரூரில் இருந்து ராமேஸ்வரம் சென்ற பஸ்சில் பணிபுரிந்தார். மதியம் 2:05 மணிக்கு பஸ் பார்த்திபனுார் வந்துள்ளது. அப்போது இருக்கையில் ராஜேந்திரன் மயங்கிய நிலையில் இருப்பதை பார்த்த டிரைவர் செல்லமுத்து அவரை எழுப்ப முயன்றார்.
பேச்சு மூச்சின்றி இருந்த ராஜேந்திரனை உடனே அருகில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கொண்டு சென்றனர்.
பரிசோதித்த டாக்டர்கள் அவர் மாரடைப்பால் இறந்ததாக தெரிவித்தனர். பார்த்திபனுார் போலீசார் விசாரிக்கின்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
40வது நாளை எட்டியது நிதி முடக்கம்: விதியை மாற்ற அமெரிக்க அதிபர் திட்டம்
-
2 யானைகள் மோதலில் தந்தத்தை இழந்த 'பீமா'
-
கோவாவில் 'அயர்ன் மேன் 70.3' போட்டி அசத்திய அண்ணாமலை, தேஜஸ்வி சூர்யா
-
கரும்பு விவசாயிகளுக்கு ரூ.3,300 சர்க்கரை ஆலைகளுக்கு எச்சரிக்கை
-
'மாஜி' காதலியுடனான படங்கள் பரப்பியவருக்கு அடி, உதை
-
லோக் ஆயுக்தா நீதிபதிகள் சொத்து விபரம் தாக்கல் செய்ய காங்., - எம்.எல்.சி., 'கிடுக்கி'
Advertisement
Advertisement