சிறப்பு தீவிர திருத்தத்தின் செயல்முறை விளக்க கூட்டம்

புதுச்சேரி: அங்கீகரிக்கப்பட்ட தேசிய மற்றும் மாநில அரசியல் கட்சிகளின் அனைத்து ஓட்டுச் சாவடி முகவர்களின் சிறப்பு தீவிர திருத்தத்தின் செயல்முறையை விளக்க கூட்டம் உழவர்கரை நகராட்சி கருத்தரங்க கூடத்தில் நடந்தது.

இதுதொடர்பாக உழவர்கரை நகராட்சி ஆணையர் சுரேஷ்ராஜ் கூறியதாவது:

சிறப்பு தீவிர திருத்தம் செயல்முறையின் ஒரு பகுதியாக, கடந்த நான்கு நாட்களாக ஓட்டுச்சாவடி நிலை அதிகாரிகள் வீடு தோறும் சென்று கணக்கெடுப்பு படிவங்களை வாக்காளர்களுக்கு வழங்கி வருகின்றனர்.

படிவம் வழங்கப்படாமல் விடுபட்ட வாக்காளர்களுக்கு, வாக்குச்சாவடி நிலை அதிகாரிகள் மீண்டும் வீடு தேடி சென்று கணக்கெடுப்பு படிவங்களை வழங்க உள்ளனர். வரும் திங்கட்கிழமை முதல் வாக்குச்சாவடி நிலை அதிகாரிகள் மீண்டும் ஒவ்வொரு வீட்டிற்கும் சென்று படிவங்களை பெறுவார்கள்.

கணக்கெடுப்பு படிவத்தை நிரப்பும் போது ஏதேனும் சந்தேகம் இருப்பின், வாக்காளர்கள் தங்களின் அடிப்படை விவரங்களை மட்டும் படிவத்தின் முதல் பகுதியில் நிரப்பி வைக்கலாம்.

மற்ற இரண்டு பகுதிகளை நிரப்ப தேவையான 2002 வாக்காளர் பட்டியல் தொடர்பான தகவல்களை வழங்கி, படிவங்களை நிரப்ப வாக்குச்சாவடி நிலை அதிகாரிகள் உதவுவார்கள்.

எனவே, வாக்குச்சாவடி நிலை அதிகாரிகளின் உதவியுடன், குறிப்பிட்ட காலத்திற்குள் படிவங்களை நிரப்பி, வாக்குச்சாவடி நிலை அதிகாரிகளிடம் வழங்க வேண்டும்' என்றார்.

Advertisement