சிறையில் 'சரக்கு' அடித்து டான்ஸ் ஆடிய கைதிகள்
பெங்களூரு: கர்நாடகாவில் உள்ள சிறையில், மது அருந்திவிட்டு கைதிகள் குத்தாட்டம் போடும் வீடியோ பரவி, அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
கர்நாடகாவின், பெங்களூரு பரப்பன அக்ரஹாரா, பெலகாவி சிறைகளில் அடைக்கப்பட்டு இருக்கும் கைதிகளுக்கு, சொகுசு வசதிகள் கிடைப்பதாக அடிக்கடி குற்றச்சாட்டு எழுவது வழக்கம். கைதிகள் சொகுசாக இருக்கும் வீடியோக்களும் அவ்வப்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றன.
இந்நிலையில், பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டு உள்ள பயங்கர வாதி ஜுகாத் சகீல் மன்னா உள்ளிட்ட சில கைதிகள், சிறைக்குள் மொபைல்போன் பயன்படுத்தும் வீடியோ நேற்று முன்தினம் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.
இதன் தொடர்ச்சியாக, சிறையில் இருக்கும் கைதிகள் சிலர், மது அருந்திவிட்டு குத்தாட்டம் போடும் வீடியோ நேற்று வெளியானது. இதுவும் பரப்பன அக்ரஹாரா சிறையில் நடந்தது என்று முதலில் கூறப்பட்டது. ஆனால், அது உறுதி செய்யப்படவில்லை.
வீடியோவில், கைதி ஒருவர் கன்னடத்தில் பேசுகிறார். இந்த வீடியோவில் இருப்பது பரப்பன அக்ரஹாராவா அல்லது மாநிலத்தில் உள்ள வேறு சிறையா என, போலீசார் விசாரிக்கின்றனர்.
மேலும்
-
40வது நாளை எட்டியது நிதி முடக்கம்: விதியை மாற்ற அமெரிக்க அதிபர் திட்டம்
-
2 யானைகள் மோதலில் தந்தத்தை இழந்த 'பீமா'
-
கோவாவில் 'அயர்ன் மேன் 70.3' போட்டி அசத்திய அண்ணாமலை, தேஜஸ்வி சூர்யா
-
கரும்பு விவசாயிகளுக்கு ரூ.3,300 சர்க்கரை ஆலைகளுக்கு எச்சரிக்கை
-
'மாஜி' காதலியுடனான படங்கள் பரப்பியவருக்கு அடி, உதை
-
லோக் ஆயுக்தா நீதிபதிகள் சொத்து விபரம் தாக்கல் செய்ய காங்., - எம்.எல்.சி., 'கிடுக்கி'