தமிழகத்தில் நாளை முதல் 3 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு; வானிலை ஆய்வு மையம்
சென்னை: தமிழகத்தில் நாளை (நவ., 11) முதல் 3 நாட்களுக்கு ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில்; மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. தமிழகப் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.
இதன் காரணமாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மிதமான முதல் கனமழை மழை பெய்து வருகிறது. நாளை (நவ.,11) முதல் 3 நாட்களுக்கு தமிழகத்தில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
கனமழை பெய்ய வாய்ப்புள்ள மாவட்டங்கள்
நவ., 11 ; தென்காசி, கன்னியாகுமரி, திருநெல்வேலி (மாவட்ட மலைப் பகுதிகள்)
நவ.,12; ராமநாதபுரம், தூத்துக்குடி, கன்னியாகுமரி, திருநெல்வேலி (மாவட்ட மலைப் பகுதிகள்)
நவ.,13 நீலகிரி, கோவை (மாவட்ட மலைப்பகுதிகள்), தூத்துக்குடி, கன்னியாகுமரி, திருநெல்வேலி (மாவட்ட மலைப் பகுதிகள்), இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
அனைத்தும் பொய்.மேலும்
-
எஸ்ஐஆரில் இருந்து வாக்குரிமையை பாதுகாப்பதே தலையாய பணி; முதல்வர் ஸ்டாலின்
-
நீதிபதிகள் குறித்து அவதூறு: தலைமை நீதிபதி கவலை
-
அமெரிக்காவில் ஆந்திர மாணவி திடீர் மரணம்: சொந்த ஊரில் செய்வதறியாது தவிக்கும் பெற்றோர்
-
ஈக்வடார் சிறையில் வன்முறை; கைதிகள் 31 பேர் உயிரிழப்பு
-
மாலியில் கடத்தப்பட்ட 5 இந்தியர்களை பாதுகாப்பாக மீட்க நடவடிக்கை; இந்திய தூதரகம்
-
எத்தனை முனை போட்டி வந்தாலும் திமுக கூட்டணி வெற்றி பெறும்: முதல்வர் ஸ்டாலின் பேட்டி