ஈக்வடார் சிறையில் வன்முறை; கைதிகள் 31 பேர் உயிரிழப்பு
குயட்டோ: ஈக்வடார் நாட்டு சிறையில் வெடித்த வன்முறை சம்பவத்தில் கைதிகள் 31 பேர் கொல்லப்பட்டனர்.
தென் அமெரிக்க நாடான ஈக்வடார், சர்வதேச போதைப்பொருள் கடத்தல் கும்பல் மற்றும் வன்முறையால் பாதிக்கப்பட்டுள்ளது. அங்குள்ள சிறைகளில், கைதிகள் இடையே வன்முறை அடிக்கடி நிகழ்கிறது. மச்சாலா நகரில் உள்ள சிறையில் இரண்டு கும்பல்களுக்கு இடையே மோதல் ஏற்பட்டது.
துப்பாக்கிச் சூடு நடத்தியும், கையெறி குண்டுகளை வீசியும் தாக்கிக் கொண்டனர். இந்த மோதலில், கைதிகள் 31 பேர் உயிரிழந்தனர். வன்முறையில் கைதிகள் மூச்சுதிணறல் ஏற்பட்டு உயிரிழந்தது விசாரணையில் தெரிவந்தது. மேலும் இந்த சம்பவத்தை பயன்படுத்தி சில கைதிகள் தப்பிச் சென்றனர். சமீப காலமாக, ஈக்வடார் சிறையில் அடிக்கடி கலவரங்கள் நடந்து வருகிறது.
இந்த குற்றசம்பவங்கள் குறித்து நடவடிக்கை எடுக்கப்படும் என ஜனாதிபதி டேனியல் நோபோவா உறுதி அளித்துள்ளார். செப்டம்பரில் நடந்த கலவரத்தில், 14 பேர் கொல்லப்பட்டனர். மேலும் 14 பேர் காயம் அடைந்தனர். தற்போதும் மீண்டும் அரங்கேறிய கலவரத்தில், கைதிகள் 31 பேர் கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை கிளப்பி இருக்கிறது.
தென் அமெரிக்க நாடுகளான கொலம்பியா, வெனிசுலா, மெக்ஸிகோ மற்றும் பல நாடுகளில் போதை பொருள்கள் தான் பிரதான தொழில் மற்றும் வியாபாரம். போதை பொருள் கடத்துபவர்களும் அதில் ஈடுபடுபவர்களும் அவர்களுக்கு இடைஞ்சலாக யாராக இருந்தாலும், கொலை செய்வதற்கும், வன்முறைகளுக்கும் தயங்கமாட்டார்கள். ஈக்வடார் சிறையில் உள்ள கைதிகளில் அதிகப்படியாக போதை பொருள் உற்பத்தி, மற்றும் விற்பனை செய்து பிடிபட்டு சிறையில் அடைக்கப்பட்டிருக்கலாம். எப்படியாவது வெளியில் தப்பித்துப் போகவேண்டுமென்று வன்முறைகளை தூண்டிவிட்ட்டிருக்கலாம். அங்கேயும் சிறைகளில் ஊழல் மலிந்திருக்கலாம் என்பதால் தான் கைதிகள் துப்பாக்கிகள், கையெறி குண்டுகள் பயன்படுத்தியுள்ளார்கள்.
வெளிநாடுகளிலும் சட்ட ஒழுங்கு சந்தி தான் சிரிக்கிறதாமேலும்
-
உ.பி., மஹாராஷ்டிராவில் உஷார்நிலை : பாதுகாப்பு அதிகரிப்பு
-
பிரதமர் மோடி எனது மூத்த சகோதரர், ஆன்மிக குரு: பூடான் பிரதமர்
-
அமெரிக்க அரசு முடக்கத்தை முடிவுக்கு கொண்டுவர மசோதா; டிரம்ப் நிம்மதி
-
நக்சல் ஒழிப்பின் அடையாளமானது பீஹாரின் சோர்மாரா: 25 ஆண்டுகள் கழித்து நாளை வாக்களிக்கும் மக்கள்
-
நிதிஷ்குமார் சேவை பீஹாருக்கு தேவை: சிராக் பாஸ்வான்
-
வாக்காளர் பட்டியல் திருத்தப்பணியில் திமுக நிர்வாகியா: தேர்தல் கமிஷன் நடவடிக்கை எடுக்க பாஜ வலியுறுத்தல்