ஊழலை ஒழிக்க அதிக எண்ணிக்கையிலான மக்கள் ஓட்டளித்துள்ளனர்; பிரசாந்த் கிஷோர் கணிப்பு
பாட்னா: பீஹாரில் ஊழலை ஒழிக்க அதிக அளவிலான மக்கள் ஓட்டளித்துள்ளனர் என ஜன் சுராஜ் கட்சித் தலைவரும், தேர்தல் வியூக வகுப்பாளருமான பிரசாந்த் கிஷோர் தெரிவித்துள்ளார்.
பீஹாரில் நாளை ( நவம்பர் 11) 2ம் கட்ட தேர்தல் நடைபெற உள்ளது. நவ.14ம் தேதி தேர்தல் முடிவுகள் வெளியாகிறது. இந்த சூழலில், பிரசாந்த் கிஷோர் நிருபர்களிடம் கூறியதாவது: பீஹார் மக்கள் ஜாதி, மதம் மற்றும் பணத்தை கடந்து, ஒரு நல்ல சமூகத்திற்காக ஓட்டளிப்பார்கள் என்று நாங்கள் நம்புகிறோம். சுதந்திரத்திற்குப் பிறகு முதல் முறையாக, பீஹாரில் இவ்வளவு பெரிய எண்ணிக்கையிலான ஓட்டுக்கள் பதிவாகியுள்ளன.
பீஹாரில் ஊழலை ஒழிக்க அதிக அளவிலான மக்கள் ஓட்டளித்துள்ளனர். காங்கிரஸ் எம்பி ராகுலின் வருகை பீஹார் சட்டசபை தேர்தலில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தாது. ராகுலுக்கு மாநிலத்தைப் பற்றி தெரியாது. அவர் இங்கு சுற்றிப் பார்ப்பதற்காக மட்டுமே வருகிறார். தேர்தல் பிரசாரத்தில் பீஹார் மக்கள் ராகுலின் பேச்சைக் கேட்கவில்லை. இவ்வாறு பிரசாந்த் கிஷோர் கூறினார்.
பீகார் சீமான் தான் பிரஷாந்த் கிஷோர். வளர்த்த கடா மார்பில் பாய்கிறது. பிஜேபி ஓட்டுக்களை பிரித்து தேஜஸ்வி மற்றும் காங்கிரஸ்க்கு உதவும் கருப்பு ஆடு.
அப்படிப் பார்த்தா நீயி கைகாட்டுன தி.மு.க.,வுக்கு ஒருத்தனும் ஓட்ட போட்டிருக்கக் கூடாது .....
அதெல்லீம் கணக்கிலே சேர்த்துத் தான் எல்லாம் நடக்குது. 160 இடத்துல ஜெயிக்க போறதா அமீத்சா சொல்லிட்டாரு.
கணக்கு ஒழுங்கா எடுத்த எல்லா தேர்தலையும் ஒட்டு சதவீதம் ஒழுங்கா இருக்கும் . செத்தவன் எப்பிடி வருவான் . எஸ் ஐ ர் எடுத்தாதான் ஒழுங்கா வரும்
ஊழல்வாதிகளுக்கு வேலை பார்த்த போது இவர்களால் நாட்டு மக்களுக்கு நண்மை இல்லை என்று தெரியாதா? தவறு செய்பவனுக்கு துணை போவதும் தவறு தான் பணம் எல்லாம் சம்பாதித்த பின் ஞானமா
எல்லா அரசியல்வாதிகளின் ஊழல் கணக்கை சரி செய்பவர் சீனியர் அவார்கள் தானே?
காலம் பதில் சொல்லும்.
ஊழலை ஒழிக்க என்றால் இனி காங்கிரஸுக்கோ, தேஜஸ்விக்கோ வாய்ப்போ இல்லையா ?மேலும்
-
பீதர் நகர பஸ் நிலையம் அசுத்தம் மகளிர் ஆணைய தலைவி அதிருப்தி
-
சகோதரருக்கு அரசு பணி ஆசை காட்டி இளம்பெண்ணிடம் ரூ.26 லட்சம் மோசடி
-
விரைவில் ஹூப்பள்ளியில் டி.என்.ஏ., பரிசோதனை பிரிவு
-
மொட்டனுாத்து -- தென்பழனி 2 கி.மீ., துாரம் புதிய ரோடு
-
இன்றைய நிகழ்ச்சி: தேனி
-
எரியூட்டும் மயானம் அமைக்க எதிர்ப்பு கிராம மக்கள் பேரூராட்சி முற்றுகை