எரியூட்டும் மயானம் அமைக்க எதிர்ப்பு கிராம மக்கள் பேரூராட்சி முற்றுகை
சின்னமனூர்: மார்க்கையன்கோட்டை பேரூராட்சி எல்லப்பட்டியில் மின்மயானம் அமைக்க கூடாது என்பதை வலியுறுத்தி கிராம மக்கள் ஊர்வலமாக சென்று பேரூராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.
தேனி மாவட்டத்தில் பல பேரூராட்சிகளில் எரியூட்டும் மயானம் அமைக்கும் பணிகள் நடந்து வருகின்றன . சில பேரூராட்சிகளில் இதற்கு எதிர்ப்பு கிளம்பியுள்ளது. மார்க்கையன்கோட்டை பேரூராட்சியில் 12 வார்டுகள் உள்ளன.
இதில் மார்க்கையன் கோட்டையில் 9 வார்டுகளும், உட்கடை கிராமமான எல்லப்பட்டியில் 2 வார்டுகளும், ஒரு வார்டு முத்துச் சாமிபுரத்திலும் உள்ளது. சில மாதங்களுக்கு முன்பு ரூ.2 கோடி மதிப்பீட்டில் மார்க்கையன்கோட்டையில் எரியூட்டும் மயானம் அமைக்க அரசு அனுமதி வழங்கியது.
பேரூராட்சி நிர்வாகம் மார்க்கையன்கோட்டையில் அமைக்க இடம் தேடிய போது, ஊர் மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். பின்னர் எல்லப்பட்டியில் அமைக்க இடம் தேர்வு செய்தனர்.
அதற்கு கடந்த ஆகஸ்ட்டில் எதிர்ப்பு தெரிவித்து எல்லப்பட்டி கிராம மக்கள் கலெக்டருக்கு மனு அளித்தனர்.
நேற்று முன்தினம் எல்லப்பட்டியில் எரியூட்டும் மயானம் அமைக்கும் பணிகளை துவக்கினர். இதனால் ஆத்திரமடைந்த கிராம மக்கள் எல்லப்பட்டியில் இருந்து 2 கி.மீ., துாரமுள்ள மார்க்கையன்கோட்டை பேரூராட்சி அலுவலகத்திற்கு ஊர்வலமாக வந்து முற்றுகையிட்டனர்.
செயல் அலுவலர் சிலம்பரசனிடம் மனு அளித்தனர். அதில் 'எரியூட்டும் மயானம் எல்லபட்டிக்கு வேண்டாம்.
மீறி அமைக்கும் பணி செய்தால் போராட்டம் நடத்துவோம்,' என தெரிவித்தனர்.செயல் அலுவலர் சிலம்பரசன் கூறுகையில், 'எரியூட்டும் மயானம் அமைக்க அரசு நிதி ஒதுக்கீடு செய்துள்ளது.
மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வேண்டாம் என்கின்றனர். இதனை கலெக்டருக்கு தெரிவிப்பேன். உயர் அதிகாரிகள் முடிவு செய்வார்கள்,' என்றார்.
மேலும்
-
எஸ்ஐஆர்-ஐ எதிர்த்து களப்போராட்டம்: முதல்வர் ஸ்டாலின்
-
நாட்டு நலனில் நாட்டமும் நடுநிலைமையும் 'தினமலர்' தனித்தன்மைகள்
-
தமிழர்களின் கலாசார அடையாளம் 'தினமலர்'
-
ஆள் தெரிந்தாலும் 'தினமலர்' நாளிதழில் செய்தி வெளியிட முடியாது!
-
மிகவும் கனத்த இதயத்துடன் பூடான் வந்துள்ளேன்: பிரதமர் மோடி உருக்கம்
-
புதுமைக்கு புதுமையாய் திகழ்கிறது 'தினமலர்'