மொட்டனுாத்து -- தென்பழனி 2 கி.மீ., துாரம் புதிய ரோடு
ஆண்டிபட்டி: ஆண்டிபட்டி ஒன்றியம், மொட்டனூத்தில் இருந்து தென் பழனி செல்வதற்கு ரோடு வசதி இல்லை. கோழிக்காரன் ஓடையை ஒட்டி அரசுக்கு சொந்தமான இடத்தை ஆங்காங்கே பலரும் ஆக்கிரமித்திருந்தனர்.
இதனால் இப்பகுதியில் ரோடு அமைக்கும் பணியில் சிக்கல் ஏற்பட்டது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு கோழிக்காரன் ஓடையின் கரையில் இருந்த ஆக்கிரமிப்புகள் வருவாய்த்துறை, ஊராட்சி நிர்வாகம் மூலம் முழுமையாக அகற்றப்பட்டது.
தற்போது ஆக்கிரமிப்பு அகற்றப்பட்ட இடங்களில் ஓடையை ஒட்டி 2 கி.மீ., தூரத்திற்கு ஊராட்சி நிர்வாகம் பொதுமக்கள் சார்பில், ராஜதானி போலீசார் பாதுகாப்புடன் மண் ரோடு அமைக்கும் பணி துவங்கியுள்ளது. மண் ரோடு அமைக்கும் பணி முழுமை அடைந்த பின் அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டு தார் ரோடு அமைப்பதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று ஊராட்சி நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.
மேலும்
-
எஸ்ஐஆர்-ஐ எதிர்த்து களப்போராட்டம்: முதல்வர் ஸ்டாலின்
-
நாட்டு நலனில் நாட்டமும் நடுநிலைமையும் 'தினமலர்' தனித்தன்மைகள்
-
தமிழர்களின் கலாசார அடையாளம் 'தினமலர்'
-
ஆள் தெரிந்தாலும் 'தினமலர்' நாளிதழில் செய்தி வெளியிட முடியாது!
-
மிகவும் கனத்த இதயத்துடன் பூடான் வந்துள்ளேன்: பிரதமர் மோடி உருக்கம்
-
புதுமைக்கு புதுமையாய் திகழ்கிறது 'தினமலர்'