சகோதரருக்கு அரசு பணி ஆசை காட்டி இளம்பெண்ணிடம் ரூ.26 லட்சம் மோசடி
தாவணகெரே: திருமண வலைதளத்தில் அறிமுகமான இளைஞர், அரசு வேலை ஆசை காட்டி இளம்பெண்ணிடம், 26 லட்சம் ரூபாய் மோசடி செய்தது குறித்து, வழக்குப் பதிவாகியுள்ளது.
தாவணகெரே நகரை சேர்ந்த 22 வயது இளம்பெண், திருமண வலைதளத்தில் வரன் தேடி வந்தார்.
இவருக்கு சில மாதங்களுக்கு முன்பு, திருமண வலைதளத்தில், மாண்டியாவை சேர்ந்த மது, 28, என்பவர் அறிமுகமானார். இருவரும் மொபைல் எண்களை பரிமாறிக்கொண்டு, அவ்வப்போது பேசினர். தங்களை பற்றிய தகவல்களை, பகிர்ந்து கொண்டனர்.
தா னும் திருமணத்துக்கு பெண் தேடுவதாக, மது கூறினார். இருவரும் திருமணம் குறித்து பேச்சு நடத்தினர்.
குடும்பத்தை பற்றி கூறும்போது, தன் அண்ணன் அரசு பணிக்கு முயற்சிப்பதை கூறினார். இதை கேட்ட மது, தனக்கு முக்கியமானவர்களை தெரியும். அவர்கள் மூலம் ரயில்வேத் துறையில் பணியில் அமர்த்துவதாக ஆசை காட்டினார்.
'இதற்கு பணம் செலவாகும்' என, கூறினார்.
இதை நம்பி ய இளம்பெண், படிப்படியாக 25.93 லட்சம் ரூபாயை அவர் கூறிய வங்கிக்கணக்குகளுக்கு பறிமாற்றம் செய்து கொடுத்தார். ஆனால் வேலை வாங்கித்தரவில்லை.
பணத்தையும் திருப்பித்தரவில்லை. பலமுறை கேட்டபிறகு, மொபைல் போனை 'சுவிட்ச் ஆப்' செய்து கொண்டார்.
தாவணகெரே போலீஸ் நிலையத்தில் இளம்பெண் புகார் அளித்தார். போலீசாரும் வழக்குப் பதிவு செய்து, விசாரணை நடத்துகின்றனர்.
மேலும்
-
எஸ்ஐஆர்-ஐ எதிர்த்து களப்போராட்டம்: முதல்வர் ஸ்டாலின்
-
நாட்டு நலனில் நாட்டமும் நடுநிலைமையும் 'தினமலர்' தனித்தன்மைகள்
-
தமிழர்களின் கலாசார அடையாளம் 'தினமலர்'
-
ஆள் தெரிந்தாலும் 'தினமலர்' நாளிதழில் செய்தி வெளியிட முடியாது!
-
மிகவும் கனத்த இதயத்துடன் பூடான் வந்துள்ளேன்: பிரதமர் மோடி உருக்கம்
-
புதுமைக்கு புதுமையாய் திகழ்கிறது 'தினமலர்'