டில்லியில் கார் குண்டுவெடிப்பு: 9 பேர் உயிரிழப்பு

31

புதுடில்லி: டில்லி செங்கோட்டை அருகே கார் குண்டுவெடிப்பு சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டது. இதில் 9 பேர் பலியாகினர். 24 பேர் காயமடைந்துள்ளனர்.


பாதுகாப்பு மிக்க டில்லி செங்கோட்டை மெட்ரோ ஸ்டேஷனின் 1வது நுழைவு வாயில் அருகே இந்த சம்பவம் நிகழ்ந்தது. இதில் அருகில் இருந்த 13 வாகனங்கள் எரிந்து நாசமாகின. இச்சம்பவத்தில் 9 பேர் பலியாகி உள்ளனர். 24 காயமடைந்துள்ளனர்.காயமடைந்தவர்கள் டில்லியில் உள்ள லோக்நாயக் ஜெய்பிரகாஷ் நாராயன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். பலி எண்ணிக்கை இன்னும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாக அஞ்சப்படுகிறது. குண்டுவெடித்ததால், காரில் இருந்த பாகங்ள் 300 அடி தூரத்திற்கு வீசி எறியப்பட்டன.


இது குறித்து தகவல் அறிந்ததும் போலீசார், வெடிகுண்டு தடுப்புப் பிரிவினர், தடயவியல் துறை நிபுணர்கள் மற்றும் தீயணைப்பு படையினர் சம்பவ இடத்துக்கு விரைந்துள்ளனர். இதனையடுத்து டில்லி முழுவதும் உஷார்படுத்தப்பட்டுள்ளது. அந்த பகுதி வழியாக போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது.


Tamil News
Tamil News
Tamil News
Tamil News
Tamil News
Tamil News
Tamil News
Tamil News
Tamil News
Tamil News
Tamil News
Tamil News

என்ஐஏ விரைவு





குண்டுவெடிப்பு சம்பவம் குறித்து தகவல் அறிந்ததும், என்ஐஏ அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு விரைந்துள்ளனர்.



பிரதமர் ஆலோசனை





டில்லியில் நடந்த குண்டுவெடிப்பு சம்பவம் தொடர்பாக, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா உடன் ஆலோசனை நடத்திய பிரதமர் மோடி, அங்கு நிலவும் சூழல் குறித்து கேட்டறிந்தார்.


மெதுவாக சென்ற காரில்



டில்லி போலீஸ் கமிஷனர் சதீஷ் கோல்சா கூறியதாவது: செங்கோட்டையில் இன்று மாலை 6:52 மணிக்கு மெதுவாக சென்று கொண்டிருந்த காரில் குண்டுவெடித்தது. அப்போது அங்கு சிலர் இருந்தனர். அருகில் இருந்த மற்ற வாகனங்களும் சேதம் அடைந்துள்ளன. டில்லி போலீஸ், என்ஐஏ, என்எஸ்ஜி, தடயவியல் துறை நிபுணர்கள் உள்ளிட்ட அனைவரும் சம்பவ இடத்திற்கு வந்துள்ளனர். விசாரணை நடக்கிறது. கூடுதல் தகவல் கிடைத்ததும் பகிரப்படும். சிலர் உயிரிழந்துள்ளனர். சிலர் காயமடைந்துள்ளனர். நிலைமை உன்னிப்பாக கண்காணிக்கப்பட்டு வருகிறது. உள்துறை அமைச்சத்திடம் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

பரபரப்பு



ஹரியானாவில் 2,900 கிலோ வெடிமருந்துகள் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில் இந்த சம்பவம் நடந்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement