அமெரிக்க அரசு முடக்கத்தை முடிவுக்கு கொண்டுவர மசோதா; டிரம்ப் நிம்மதி
வாஷிங்டன்: அமெரிக்க அரசு நிர்வாக முடக்கத்தை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான மசோதா அமெரிக்க செனட்டில் நிறைவேறியது.
அமெரிக்காவில் அக்டோபர் 1ம் தேதி முதல் புதிய நிதி ஆண்டு துவங்கும். அதில் மத்திய அரசு ஊழியர்களுக்கு சம்பளம், உணவு உதவி போன்ற செலவினங்களுக்கு பார்லிமென்டில் நிதி மசோதாவை நிறைவேற்ற வேண்டும். ஆனால், கடந்த அக்டோபர் 1ல் எதிர்க்கட்சியான ஜனநாயக கட்சியின் ஆதரவு, அதிபர் டொனால்டு டிரம்ப் நிர்வாகத்துக்கு கிடைக்காததால், நிதி மசோதாவை நிறைவேற்ற முடியவில்லை. இதனால் அரசின் பல்வேறு துறைகள் முடங்கியது.
முந்தைய அதிபர் ஒபாமா கொண்டு வந்த மருத்துவக் காப்பீடு திட்டத்துக்கான அரசு மானியங்கள் டிசம்பருக்குள் முடிவடைகிறது. இதை நீட்டிக்க ஜனநாயக கட்சியினர் கோரிக்கை வைக்கின்றனர். அதை டிரம்ப் ஏற்க மறுக்கிறார். இதனால் மசோதாவை நிறைவேற்றுவதில் இழுபறி நீடித்தது. அரசு நிர்மாகம் முடங்கி 40 நாட்கள் ஆகியுள்ளது. நடந்து முடிந்த மேயர் மற்றும் மாகாண தேர்தலில் குடியரசு கட்சி தோற்றதற்கு அரசு முடக்கமே காரணம் என டிரம்ப் கருதுகிறார். எனவே முடக்கத்தை விரைவில் நீக்க விரும்பினார்.
தற்போது, வரலாற்றிலேயே மிக நீண்ட கால அரசு நிர்வாக முடக்கத்தை முடிவுக்குக் கொண்டுவருவதற்காக, குடியரசுக் கட்சியினர் கொண்டு வந்த செலவு மசோதா அமெரிக்க செனட்டில் நிறைவேறியது. இந்தச் சூழலில் தான் ஒரு சமரச முடிவு எட்டப்பட்டுள்ளது. 8 ஜனநாயகக் கட்சி எம்பிக்கள் செலவின மசோதாவுக்கு ஆதரவளித்தனர்.
அதாவது இப்போது செலவின மசோதா மட்டும் நிறைவேறுகிறது. இந்த புதிய மசோதாவின்படி பெடரல் அரசுக்கு ஜனவரி 30ம் தேதி வரை தேவைப்படும் நிதி ஒதுக்கப்படும். இதன் மூலம் அவர்களுக்குத் தேவையான 60 ஓட்டுக்கள் கிடைத்துவிட்டது. இதன் மூலம் செலவின மசோதா செனட் சபையில் மசோதா செனட்டில் நிறைவேறியது.
அடுத்தகட்டமாகச் செலவின மசோதாவை அவர்கள் பிரதிநிதிகள் சபைக்கு அனுப்ப வேண்டும். அங்கு டிரம்ப்பின் குடியரசுக் கட்சிக்குத் தேவையான பெரும்பான்மை இருப்பதால் எளிதாக மசோதா நிறைவேறிவிடும். அதன் பிறகு அதிபர் டிரம்ப் அதற்கு ஒப்புதல் தருவார். இதனால் அரசு நிர்வாகம் முடக்கம் ஓரிரு நாட்களில் முடிவுக்கு வரும் சூழல் ஏற்பட்டுள்ளது. இது அமெரிக்க அதிபர் டிரம்புக்கு நிம்மதியை அளித்துள்ளது.
மேலும்
-
பீதர் நகர பஸ் நிலையம் அசுத்தம் மகளிர் ஆணைய தலைவி அதிருப்தி
-
சகோதரருக்கு அரசு பணி ஆசை காட்டி இளம்பெண்ணிடம் ரூ.26 லட்சம் மோசடி
-
விரைவில் ஹூப்பள்ளியில் டி.என்.ஏ., பரிசோதனை பிரிவு
-
மொட்டனுாத்து -- தென்பழனி 2 கி.மீ., துாரம் புதிய ரோடு
-
இன்றைய நிகழ்ச்சி: தேனி
-
எரியூட்டும் மயானம் அமைக்க எதிர்ப்பு கிராம மக்கள் பேரூராட்சி முற்றுகை