டில்லி கார் குண்டுவெடிப்பு: போலீஸ் கமிஷனர் விளக்கம்
புதுடில்லி: சிக்னல் அருகே மெதுவாக சென்று கொண்டிருந்த காரில் நவ.,10 மாலை குண்டு வெடித்ததாக டில்லி போலீஸ் கமிஷனர் சதீஷ் கோல்சா கூறியுள்ளார்.
கார் குண்டுவெடிப்பு நடந்த இடத்தை பார்வையிட்ட பிறகு டில்லி போலீஸ் கமிஷனர் சதீஷ் கோல்சா கூறியதாவது: செங்கோட்டை அருகே நவ.,10 மாலை 6:52 மணிக்கு மெதுவாக சென்று கொண்டிருந்த காரில் குண்டுவெடித்தது. அப்போது அங்கு சிலர் இருந்தனர்.
அருகில் இருந்த மற்ற வாகனங்களும் சேதம் அடைந்துள்ளன. டில்லி போலீஸ், என்ஐஏ, என்எஸ்ஜி, தடயவியல் துறை நிபுணர்கள் உள்ளிட்ட அனைவரும் சம்பவ இடத்திற்கு வந்துள்ளனர். விசாரணை நடக்கிறது.
கூடுதல் தகவல் கிடைத்ததும் பகிரப்படும். சிலர் உயிரிழந்துள்ளனர். சிலர் காயமடைந்துள்ளனர். நிலைமை உன்னிப்பாக கண்காணிக்கப்பட்டு வருகிறது. உள்துறை அமைச்சத்திடம் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
வாசகர் கருத்து (7)
V RAMASWAMY - Bengaluru,இந்தியா
11 நவ,2025 - 08:12 Report Abuse
எந்த ஒரு சாதிமத வேறுபாடும் பார்க்காமல், இந்த பரிதாப பயங்கர குண்டுவெடிப்பு ஒவ்வொரு இந்தியன் மீதும் வீசப்பட்டதாகக் கருதி தக்க நடவடிக்கை எடுக்கவேண்டும். 0
0
Reply
Iyer - Karjat,இந்தியா
11 நவ,2025 - 06:10 Report Abuse
1. இது பாகிஸ்தானால் முடிக்கிவிடப்பட்ட வெறிச்செயல் என்பதில் சந்தேகமே இல்லை.
2. அமெரிக்காவோ அல்லது சீனாவோ இந்த பயங்கரவாதத்தின் பின் உள்ளார்கள்.
3. OPERATION SINDHOOR PART II - இந்த முறை பாகிஸ்தானின் முழு மிலிட்டரி ஐ அழிக்கவேண்டும்.
4. உள்நாட்டில் - சந்தேகப்பட்டியலில் உள்ள எல்லாறையும் கைது செய்து மேலே அனுப்பனும் 0
0
Senthoora - Sydney,இந்தியா
11 நவ,2025 - 06:38Report Abuse
ஆதாரம் இல்லாமல் சீனா, அமெரிக்காவை குற்றம் சொல்லக்கூடாது முதலில் ஆதாரத்தை தேடுங்க 0
0
Senthoora - Sydney,இந்தியா
11 நவ,2025 - 06:40Report Abuse
சிங்கப்பூரில் இருந்து சொல்வது சுலபம் ஐயர். 0
0
Reply
Kasimani Baskaran - Singapore,இந்தியா
11 நவ,2025 - 03:58 Report Abuse
காரின் பாட்டரி தீபிடித்து இருக்க வாய்ப்பு இருக்கிறது. 0
0
Senthoora - Sydney,இந்தியா
11 நவ,2025 - 09:06Report Abuse
அப்படி இருந்தாலும் இப்போ நம்பமுடியாது. போனவாரம் அமெரிக்கா, ஆஸ்திரேலியா உளவுத்துறை குண்டுவெடிப்பு இலங்கையிலும், இந்திய வடமாநிலத்திலும் நடக்கலாம் என்று எச்சரித்து இருந்தது. 0
0
Reply
Ramesh Sargam - Back in Bengaluru, India.,இந்தியா
11 நவ,2025 - 00:39 Report Abuse
இது பாக்கிஸ்தான் ஆதரவு பயங்கரவாதிகள் தாக்குதல் என்று முடிவாகிவிட்டது. இனியும் காலம் தாழ்த்தாமல், மத்திய அரசு, நமது வீரர்களுக்கு முழு சுதந்திரம் கொடுத்து பாகிஸ்தான் மீது ஒரு கடும் தாக்குதல் நடத்தி அவர்களை அடக்கிவைக்கவேண்டும். அல்லது ஒட்டுமொத்தமாக அழிக்கச்சொல்லவேண்டும். வேண்டாம் மீண்டும் உயிர்ப்பலி. 0
0
Reply
மேலும்
-
எஸ்ஐஆர்-ஐ எதிர்த்து களப்போராட்டம்: முதல்வர் ஸ்டாலின்
-
நாட்டு நலனில் நாட்டமும் நடுநிலைமையும் 'தினமலர்' தனித்தன்மைகள்
-
தமிழர்களின் கலாசார அடையாளம் 'தினமலர்'
-
ஆள் தெரிந்தாலும் 'தினமலர்' நாளிதழில் செய்தி வெளியிட முடியாது!
-
மிகவும் கனத்த இதயத்துடன் பூடான் வந்துள்ளேன்: பிரதமர் மோடி உருக்கம்
-
புதுமைக்கு புதுமையாய் திகழ்கிறது 'தினமலர்'
Advertisement
Advertisement