டில்லியில் 'ஸ்போர்ட்ஸ் சிட்டி' * இடிக்கப்படும் நேரு மைதானம்
புதுடில்லி: டில்லியில் 106 ஏக்கரில் அமைந்துள்ளது நேரு மைதானம். 1982ல் கட்டப்பட்டது. இங்கு ஆசிய விளையாட்டு (1982) நடந்தது. 2010ல் ரூ. 900 கோடியில் புதுப்பிக்கப்பட்டு, காமன்வெல்த் விளையாட்டு (2010) நடந்தது. சமீபத்தில் உலகத் தரத்தினால் ஆன 'மோன்டோ' டிராக் போடப்பட்டு, உலக பாரா தடகள சாம்பியன்ஷிப் நடந்தது.
தவிர, இந்திய விளையாட்டு ஆணையத்தில் தலைமை அலுவலகம், தேசிய ஊக்கமருந்து தடுப்பு மையம், ஊக்கமருந்து சோதனை மையம், வருமான வரித்துறை அலுவலகம் உள்ளிட்டவை இங்கு அமைந்துள்ளன.
தற்போது இம்மைதானத்தை இடித்து விட்டு, புதிதாக 'ஸ்போர்ட்ஸ் சிட்டியை' மூன்று கட்ட பணிகளில் உருவாக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
ஆமதாபாத், சர்தார் வல்லபாய் படேல் ஸ்போர்ட்ஸ் காம்ப்ளக்ஸ், மெல்போர்ன் விளையாட்டு நகரங்களைப் போல டில்லி நேரு மைதானம் மாறவுள்ளது.
இதுகுறித்து மத்திய விளையாட்டு அமைச்சகத்தின் தரப்பில் வெளியான செய்தியில்,'நேரு மைதானத்தின் 100 ஏக்கருக்கும் அதிகமான நிலம், சரியான முறையில் பயன்படுத்தப்படவில்லை. இதனால் பெரிய தொடர்களை நடத்தவும், வீரர், வீராங்கனைகளுக்கான போதிய பயிற்சி வசதிகள், தங்குமிடம் உட்பட அனைத்து வசதி கொண்ட 'ஸ்போர்ட்ஸ் சிட்டி' கட்டப்படும்,' என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும்
-
எஸ்ஐஆர்-ஐ எதிர்த்து களப்போராட்டம்: முதல்வர் ஸ்டாலின்
-
நாட்டு நலனில் நாட்டமும் நடுநிலைமையும் 'தினமலர்' தனித்தன்மைகள்
-
தமிழர்களின் கலாசார அடையாளம் 'தினமலர்'
-
ஆள் தெரிந்தாலும் 'தினமலர்' நாளிதழில் செய்தி வெளியிட முடியாது!
-
மிகவும் கனத்த இதயத்துடன் பூடான் வந்துள்ளேன்: பிரதமர் மோடி உருக்கம்
-
புதுமைக்கு புதுமையாய் திகழ்கிறது 'தினமலர்'