சாதிப்பாரா லக்சயா சென்: ஜப்பான் ஓபன் பாட்மின்டனில்
குமாமோட்டோ: ஜப்பான் ஓபன் பாட்மின்டனில் இந்தியாவின் லக்சயா சென் சாதிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஜப்பானில், 'சூப்பர் 500' அந்தஸ்து பெற்ற மாஸ்டர்ஸ் பாட்மின்டன் தொடர் இன்று துவங்குகிறது. இந்தியா சார்பில் ஒற்றையரில் லக்சயா சென், பிரனாய், ஆயுஷ் ஷெட்டி, தருண், கிரண் ஜார்ஜ் பங்கேற்கின்றனர்.
இந்த ஆண்டு ஹாங்காங் ஓபனில் பைனல் வரை சென்ற லக்சயா சென், டென்மார்க், ஹைலோ ஓபனில் காலிறுதியோடு திரும்பினார். ஜப்பான் ஓபனில் எழுச்சி கண்டால் கோப்பை வென்று சாதிக்கலாம். இவர், தனது முதல் சுற்றில் ஜப்பானின் கோகி வடனாபேவை சந்திக்கிறார்.
காயத்தில் இருந்து மீண்ட பிரனாய், தனது முதல் சுற்றில் மலேசியாவின் ஜுன் ஹாவோ லியோங்கை எதிர்கொள்கிறார்.
கலப்பு இரட்டையரில் ரோகன் கபூர், ருத்விகா ஷிவானி ஜோடி களமிறங்குகிறது.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
எஸ்ஐஆர்-ஐ எதிர்த்து களப்போராட்டம்: முதல்வர் ஸ்டாலின்
-
நாட்டு நலனில் நாட்டமும் நடுநிலைமையும் 'தினமலர்' தனித்தன்மைகள்
-
தமிழர்களின் கலாசார அடையாளம் 'தினமலர்'
-
ஆள் தெரிந்தாலும் 'தினமலர்' நாளிதழில் செய்தி வெளியிட முடியாது!
-
மிகவும் கனத்த இதயத்துடன் பூடான் வந்துள்ளேன்: பிரதமர் மோடி உருக்கம்
-
புதுமைக்கு புதுமையாய் திகழ்கிறது 'தினமலர்'
Advertisement
Advertisement