சித்தோடு அருகே கடத்தப்பட்ட குழந்தை நாமக்கல்லில் மீட்பு

பவானி, ஆந்திர மாநிலம் நெல்லுார் தம்பதி வெங்கடேஷ்-கீர்த்தனா, ஈரோடு மாவட்டம் கோணவாய்க்கால் பகுதியில் சாலையோரம் வசித்தபடி, துடைப்பம் தயாரித்து விற்று வருகின்றனர். இவர்களின் ஒன்றரை வயது பெண் குழந்தை கடந்த மாதம், ௧௬ம் தேதி கடத்தப்பட்டது.

ஏ.டி.எஸ்.பி., தங்கவேலு தலைமையில் ஏழு தனிப்படை அமைக்கப்பட்டு, குழந்தையை தேடும் பணி தீவிரமாக நடந்தது. நேற்று முன்தினத்துடன், 25 நாட்களை கடந்த நிலையில், நாமக்கல் மாவட்டம் துறையூர் சாலையில் குழந்தையை, தனிப்படை போலீசார் நேற்று மீட்டனர். இது தொடர்பாக இருவரிடம் விசாரணை நடந்து வருகிறது. விசாரணை முடிந்த பிறகே, முழு விபரத்தையும் சொல்ல முடியும் என்றும், போலீசார் தெரிவித்துள்ளனர்.

Advertisement