மறதியா... விதியா...? பலியான இளம்பெண்
பெருந்துறை, கோவை, எல்.எம்.டபிள்யூ., குடியிருப்பை சேர்ந்த நாகராஜ் மகன் மதுமிதா, 21; பெருந்துறையை சேர்ந்தவர் கவுதம், 25; காதலித்த இவர்கள் கடந்த, 2022ல் திருமணம் செய்து கொண்டனர். பெருந்துறை அடுத்த பணிக்கம்பாளையத்தில் வசித்தனர். மதுமிதாவும்
வேலைக்கு சென்று வந்தார். நேற்று காலை பொது குளியலறையில் பிளாஸ்டிக் பக்கெட்டில் ஹீட்டர் போட்டுள்ளார். ஞாபக மறதியாக தண்ணீர் சுடுகிறதா என்று தொட்டு பார்த்தபோது, மின்சாரம் தாக்கியுள்ளது. அலறியபடி விழுந்தவரை மற்ற குடியிருப்புவாசிகள் மீட்டு, பெருந்துறை அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மருத்துவ பரிசோதனையில் அவர் ஏற்கனவே இறந்து விட்டது தெரிய வந்தது. பெருந்துறை போலீசார் விசாரிக்கின்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
பீதர் நகர பஸ் நிலையம் அசுத்தம் மகளிர் ஆணைய தலைவி அதிருப்தி
-
சகோதரருக்கு அரசு பணி ஆசை காட்டி இளம்பெண்ணிடம் ரூ.26 லட்சம் மோசடி
-
விரைவில் ஹூப்பள்ளியில் டி.என்.ஏ., பரிசோதனை பிரிவு
-
மொட்டனுாத்து -- தென்பழனி 2 கி.மீ., துாரம் புதிய ரோடு
-
இன்றைய நிகழ்ச்சி: தேனி
-
எரியூட்டும் மயானம் அமைக்க எதிர்ப்பு கிராம மக்கள் பேரூராட்சி முற்றுகை
Advertisement
Advertisement