லக்காபுரம் தொழிலாளி சாவில் சந்தேகம் ஈரோடு அரசு மருத்துவமனை முற்றுகை
ஈரோடு, ஈரோட்டை அடுத்த லக்காபுரம், கரட்டாங்காட்டை சேர்ந்தவர் முருகேசன், 47, கூலி தொழிலாளி. நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு, விட்டம்பாளையத்தை சேர்ந்த கந்தசாமி தோட்டத்தில் கூலி வேலை செய்தார். முன் பணமாக, 40 ஆயிரம் ரூபாய் பெற்றதாக கூறப்படுகிறது. உடல்நிலை சரியில்லாததால் கரட்டாங்காட்டிற்கு அக்டோபரில் முருகேசன் வந்துள்ளார். ஒரு மாதமாக பணிக்கு வராத நிலையில், உறவினர் கணபதி மற்றும் இருவருடன், கரட்டாங்காட்டிற்கு கந்தசாமி கடந்த, 8ல் வந்து, முருகேசனை வலுக்கட்டாயமாக வேலைக்கு அழைத்து சென்றுள்ளனர்.
இந்நிலையில், 8ம் தேதி மாலை முருகேசன் மகன் அரவிந்தசாமிக்கு போன் செய்த கந்தசாமி, தந்தையை அழைத்து செல் என்று கூறியுள்ளார். இதன்படி சென்றபோது, பாண்டு பேப்பரில் அரவிந்தசாமியிடம் கந்தசாமி கையெழுத்து பெற்றுள்ளார். இதையடுத்து தந்தையை அழைத்து சென்ற நிலையில், உடல் வலிப்பதாக கூறி ஈரோடு அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட முருகேசன், 9ம் தேதி காலை இறந்தார். இந்நிலையில் முருகேசன் சாவில் சந்தேகம் உள்ளதாகவும், கொலை வழக்காக பதிவு செய்து கந்தசாமி, கணபதி உள்ளிட்டோரை கைது செய்யுமாறு, அரவிந்தசாமி மற்றும் அவரது உறவினர்கள் கோரிக்கை விடுத்தனர். அதுவரை உடலை பெற மாட்டோம் என்று கூறிய நிலையில், அரசு மருத்துவமனையில், நேற்று குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
போலீசார் சமாதானம் செய்து, முருகேசன் உடலை பெருந்துறை அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பிரேத பரிசோதனையில் உடலில் காயங்கள் இருப்பதாக அறிக்கை வந்தால், சந்தேக மரணம் என்று வழக்குப்பதிந்து விசாரிக்க முடிவு செய்துள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.
மேலும்
-
பீதர் நகர பஸ் நிலையம் அசுத்தம் மகளிர் ஆணைய தலைவி அதிருப்தி
-
சகோதரருக்கு அரசு பணி ஆசை காட்டி இளம்பெண்ணிடம் ரூ.26 லட்சம் மோசடி
-
விரைவில் ஹூப்பள்ளியில் டி.என்.ஏ., பரிசோதனை பிரிவு
-
மொட்டனுாத்து -- தென்பழனி 2 கி.மீ., துாரம் புதிய ரோடு
-
இன்றைய நிகழ்ச்சி: தேனி
-
எரியூட்டும் மயானம் அமைக்க எதிர்ப்பு கிராம மக்கள் பேரூராட்சி முற்றுகை