மண் மாசடைந்து உள்ளதா? தொழில் பகுதிகளில் ஆய்வு
சென்னை: தமிழகத்தில் தொழிற்சாலைகள் உள்ள பகுதிகளில் மண் மாசடைந்துள்ளதா என்பது குறித்த ஆய்வு பணிகளை, மாசு கட்டுப்பாட்டு வாரியம் துவக்கி உள்ளது.
தமிழகத்தில் விவசாயிகள் பயன்பாட்டுக்காக, கிராம வாரியாக மண்ணின் தரம் ஆய்வு செய்யப்படுவது வழக்கம். இதில், கோவை வேளாண் பல்கலை முக்கிய பங்கு வகிக்கிறது.
இது மட்டுமல்லாது, கட்டுமான திட்டங்கள் செயல்படுத்தும் போதும், அந்தந்த நிலத்தில் உள்ள மண்ணின் சுமை தாங்கும் திறன் பரிசோதிக்கப்படுகிறது. இத்துடன், கிராம வாரியாக காணப்படும் மண் வகைகள், அவற்றின் தரம் குறித்த தகவல்களை, வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி துறை திரட்டி வருகிறது.
இந்நிலையில் தொழிற்சாலைகள் அதிகம் உள்ள பகுதிகளில், மண் எந்த அளவுக்கு மாசடைந்துள்ளது என்பதை ஆய்வு செய்ய, அரசு உத்தரவிட்டுள்ளது.
இதன் அடிப்படையில், கோவை வேளாண் பல்கலையுடன் இணைந்து, மாசு கட்டுப்பாட்டு வாரியம், மண்ணின் தரம் குறித்த வரைபடங்களை தயாரிக்கும் பணியில் ஈடுபட்டு உள்ளது.
இது குறித்து, தமிழக மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரி ஒருவர் கூறியதாவது:
தொழில் வளர்ச்சி உள்ள கிராமங்கள் பட்டியலிடப்பட்டு, அங்கு மண் மாதிரிகள் திரட்டப்பட உள்ளன. இவ்வாறு திரட்டப்படும் மாதிரிகள், ஆய்வகங்களில் சோதனை செய்யப்படும்.
இதில் தெரியவரும் தகவல்கள் அடிப்படையில், எந்த அளவுக்கு மண் வளம் மாசடைந்துள்ளது என்பது குறித்த அறிவியல்பூர்வ அறிக்கை தயாரிக்கப்படும். பின்னர், மாசு அளவை குறைப்பது தொடர்பான நடவடிக்கைகள் எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
மேலும்
-
எஸ்ஐஆர்-ஐ எதிர்த்து களப்போராட்டம்: முதல்வர் ஸ்டாலின்
-
நாட்டு நலனில் நாட்டமும் நடுநிலைமையும் 'தினமலர்' தனித்தன்மைகள்
-
தமிழர்களின் கலாசார அடையாளம் 'தினமலர்'
-
ஆள் தெரிந்தாலும் 'தினமலர்' நாளிதழில் செய்தி வெளியிட முடியாது!
-
மிகவும் கனத்த இதயத்துடன் பூடான் வந்துள்ளேன்: பிரதமர் மோடி உருக்கம்
-
புதுமைக்கு புதுமையாய் திகழ்கிறது 'தினமலர்'