பீஹாரில் மீண்டும் தேஜ ஆட்சி: கருத்துக்கணிப்புகளில் தகவல்

26


பாட்னா: பீஹாரில் மீண்டும் தேஜ கூட்டணி ஆட்சி அமையும் என தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகளில் கூறப்பட்டுள்ளது.


பீஹாரில் மொத்தம் உள்ள 243 சட்டசபை தொகுதிகளுக்கு நவ.,6 மற்றும் இன்று( நவ.,11) இரண்டு கட்டமாக தேர்தல் நடந்தது. 121 தொகுதிகளுக்கு நடந்த முதற்கட்ட தேர்தலில் 65 சதவீத ஓட்டுக்கள் பதிவாகின. இரண்டாம் கட்ட தேர்தலில் 5 மணி நிலவரப்படி 67.14 சதவீத ஓட்டுகள் பதிவாகி இருந்தது.


இந்த தேர்தலில் பாஜ, ஐக்கிய ஜனதா தளம் உள்ளிட்ட கட்சிகள் அடங்கிய தேஜ கூட்டணிக்கும், ராஷ்ட்ரீய ஜனதா தளம், காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் அடங்கிய மகாகத்பந்தன் கூட்டணிக்கும் கடுமையான போட்டி நிலவியது. இத்துடன் தேர்தல் வியூக நிபுணர் பிரசாந்த் கிஷோர் ஜன் சுராஜ் என்ற கட்சியை துவக்கி 3வதாக களமிறங்கியுள்ளார். இரண்டு கட்ட தேர்தல் முடிந்த நிலையில் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் வெளியாகியுள்ன.



@quote@இந்த கருத்துக்கணிப்புகளில் மீண்டும் தேஜ கூட்டணியே ஆட்சி அமைக்கும் என பெரும்பாலான கருத்துக்கணிப்பு முடிவுகளில் கூறப்பட்டுள்ளன. quote


இந்த தேர்தலில் களமிறங்கியுள்ள தேர்தல் வியூக நிபுணர் பிரசாந்த் கிஷோரால் எந்த தாக்கமும் ஏற்படாது எனவும் , அவரது கட்சி சொற்ப தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெறும் எனவும் இந்த கருத்துக்கணிப்புகளில் கூறப்பட்டுள்ளது.


கருத்துக்கணிப்பு முடிவுகள்

டைம்ஸ் நவ்



தேஜ கூட்டணி: 142

மகாகத்பந்தன்: 95

ஜன் சுராஜ்: 1

மற்றவர்கள்: 5

ஜேவிசி கருத்துக்கணிப்பு



தேஜ கூட்டணி :135- 150

மகாகத்பந்தன் :88 - 103

ஜன் சுராஜ் : 0-1

மற்றவர்கள் :3-6

மாட்ரிஸ்



தேஜ கூட்டணி :147-167

மகாகத்பந்தன் :70 - 90

ஜன் சுராஜ் : 0-2

மற்றவர்கள் :2-8

பீப்பிள்ஸ் இன்சைட்



தேஜ கூட்டணி :133- 148

மகாகத்பந்தன் :87 - 102

ஜன் சுராஜ் : 0-2

மற்றவர்கள் :3-6

போல்ஸ் ஆப் போல்ஸ்



தேஜ கூட்டணி : 138 -148

மகாகத்பந்தன்: 82 - 98

ஜன் சுராஜ் :0 -2

மற்றவர்கள்: 3- 7

பீப்பிள்ஸ் பல்ஸ்



தேஜ கூட்டணி : 133 -159

மகாகத்பந்தன் :75 -101

ஜன் சுராஜ் :0-1

மற்றவர்கள்:0-2





டைனிக் பாஸ்கர்





தேஜ கூட்டணி: 145 - 160

மகாகத்பந்தன் : 73 - 91

ஜன்சுராஜ்: 0 - 3

மற்றவர்கள் 5 - 7

Advertisement