கோர்ட் வெளியே குண்டு வெடிப்பு: பாகிஸ்தானில்12 பேர் பலி
இஸ்லாமாபாத்:பாகிஸ்தானின் இஸ்லாமாபாத்தில் மாவட்ட நீதிமன்றத்திற்கு வெளியே இன்று கார் குண்டுவெடிப்பு நிகழ்ந்தது, இதில் 12 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் பலர் காயமடைந்தனர்.
பாகிஸ்தானின் இஸ்லாமாபாத்தில் மாவட்ட நீதிமன்றம் உள்ளது. இந்த நீதிமன்ற வளாகத்தின் நுழைவாயில் அருகே இன்று காரில் குண்டு வெடிப்பு நிகழ்ந்தது.
இந்தப்பகுதி, வழக்கறிஞர்கள், விசாரணைக்கு வரும் தனிநபர்கள் ஒன்று கூடும் பரபரப்பான பகுதியாகும். குண்டுவெடிப்பு குறித்து விசாரணை நடந்து வருகிறது. போலீசார் இன்னு உறுதிப்படுத்தவில்லை.
அதிகாரிகள் அந்தப் பகுதியை சுற்றி வளைத்துள்ளனர், காயமடைந்தவர்கள் அருகிலுள்ள மருத்துவமனைகளுக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர். கடந்த மார்ச் 2014 இல் இதேபோன்ற தாக்குதல் அதே நீதிமன்ற வளாகத்தில் நடந்தது, இந்த சம்பவத்தில் ஒரு நீதிபதி உட்பட 11 பேர் பலியானார்கள்.
வாசகர் கருத்து (1)
தமிழ்வேள் - திருவள்ளூர்-தொண்டைமண்டலம்-பாரதப் பேரரசு,இந்தியா
11 நவ,2025 - 20:36 Report Abuse
போனவாரம் காலண்டர் வெள்ளிகிழமைக்கு பிறகு கிழிக்கவில்லை போல.... செவ்வாய் கிழமை டப்பாஸ் வெடித்து விளையாட்டு.. 0
0
Reply
மேலும்
-
அர்ஜுன், பிரக்ஞானந்தா 'டிரா' * உலக கோப்பை செஸ் தொடரில்...
-
அந்த நாள் ஞாபகம்... * உலக விளையாட்டு செய்திகள்
-
2026 ம் ஆண்டுக்கான விடுமுறை நாட்கள்: தமிழக அரசு அறிவிப்பு
-
போலீஸ் வாகனம் மோதி ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் பலி
-
டில்லியில் தாக்குதல் நடத்த பரிதாபாத்தில் உண்டான சதி
-
பீஹார் வரலாற்றில் சிறப்பான சட்டமன்ற தேர்தல்: தலைமை தேர்தல் கமிஷனர்
Advertisement
Advertisement