மூன்றரை மணி நேரம் பார்க்கிங்கில் நிறுத்தப்பட்டிருந்த கார்; டில்லி குண்டுவெடிப்பில் புதிய தகவல்கள்
புதுடில்லி: டில்லி கார் குண்டு வெடிப்பு தொடர்பாக, நுாற்றுக்கணக்கான சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்த புலனாய்வு அமைப்பினர், அந்த கார் சென்ற, வந்த வழித்தடம் பற்றியும், அதில் வந்தவர்களின் விவரங்களையும் கண்டறிந்துள்ளனர்.
டில்லி செங்கோட்டை அருகே கார் குண்டு வெடித்த பயங்கரவாத சம்பவத்தின் தாக்கம் இன்னமும் அகலவில்லை. 12 பேரை பலி கொண்டு ஒட்டுமொத்த நாட்டையே அதிர்ச்சிக்கு ஆளாக்கிய இந்த சம்பவத்தின் பின்னணியை புலனாய்வு அமைப்பினர் துரித கதியில் கண்டறிந்துள்ளனர்.
அவர்களின் முதல்கட்ட விசாரணையானது, இந்த சம்பவத்துக்கு பயன்படுத்தப்பட்ட வெள்ளை நிற கார் பற்றியதில் இருந்து தொடங்குகிறது. இந்த கார் யாருடையது, யார் ஓட்டி வந்தனர், அதில் இருந்தவர்கள் உண்மையில் எத்தனை பேர்? உள்ளிட்ட விவரங்களை சேகரித்து இருக்கின்றனர்.
அதன் விவரங்கள் வருமாறு;
குண்டுவெடிப்புக்கு பயன்படுத்தப்பட்ட வெள்ளை நிற கார், திங்கட்கிழமை காலை 8.13 மணிக்கு பரிதாபாத்தில் இருந்து பதர்பூர் டோல்கேட் வழியாக டில்லிக்குள் நுழைந்து இருக்கிறது. கார் வரும் காட்சிகள், டோல்கேட்டில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமரா காட்சிப்பதிவில் தெளிவாக பதிவாகி உள்ளன.
அடுத்த 10 மணி நேரம் கழித்தே குண்டுவெடிப்பு சம்பவம் அரங்கேறி இருக்கிறது. காலை 8.13 மணி முதல் மாலை குண்டு வெடித்த நிமிடம் வரை இந்த கார் எங்கெங்கே சென்றது என்பதை கிட்டத்தட்ட 100 சிசிடிவி கேமரா பதிவுகள் மூலம் துல்லியமாக சேகரித்துள்ளனர்.
அதன் பின்னர், இந்த கார் ஓக்லா அருகே பெட்ரோல் பங்கில் உள்ள சிசிடிவி கேமராவில் சிக்கி உள்ளது. அப்போது காலை 8.20 மணி. பிறகு மதியம் 3.19 மணிக்கு டில்லி செங்கோட்டை பகுதியில் உள்ள வாகன பார்க்கிங்கில் இருந்துள்ளது.
கிட்டத்தட்ட மூன்றரை மணி நேரம் அதே இடத்தில் நிறுத்தப்பட்டு இருந்த கார் மாலை 6.48 மணிக்கு அங்கிருந்து புறப்பட்டுள்ளது. அடுத்த சில நிமிடங்களில் தான் சரியாக 6.52 மணிக்கு கேட் நம்பர் 1 என்ற இடத்தில் அந்த கார் வெடித்துச் சிதறி இருக்கிறது.
வெள்ளை நிற கார் யாருடையது என்பதை கண்டுபிடிக்காதபடி இருக்க பயங்கரவாதிகள் ஒரு உபாயத்தை கையாண்டு இருக்கின்றனர். அதாவது காரின் முதல் உரிமையாளரிடம் இருந்து வாங்கி, அதன் பின்னர் பல பேரிடம் கை மாற்றிவிட்டு இருந்துள்ளனர்.
கார் ஒன்று தான்... ஆனால் அதன் உரிமையாளர்கள் பலர் என்று குழப்பி விடவே இது போன்ற உத்தியை அவர்கள் பயன்படுத்தி உள்ளனர் என்று விசாரணையில் தெரியவந்துள்ளது.
பதர்பூர் டோல்கேட் சிசிடிவி கேமராவில் கார் உள்ளே நுழையும் போது அதனுள் ஒருவர் மட்டுமே அதுவும், டிரைவர் சீட்டில் இருப்பது தெளிவாக இருக்கிறது. அவரின் அடுத்த சீட்டிலும், பின்னே உள்ள சீட்களிலும் யாரும் இல்லாத காட்சிகள் இதை உறுதிப்படுத்தி இருக்கின்றன.
காரை ஓட்டி வந்தவர் ஒருவர், ஆனால் அது வெடித்துச் சிதறிய போது உள்ளே இருந்தது 3 பேர் என்ற நிலையில் இவர்களை பற்றிய விவரங்களையும் புலனாய்வு அமைப்புகள் தீவிரமாக சேகரித்து வருகின்றன. இந்த விவரங்களை சேகரிப்பதற்கு, கார் வந்த வழித்தடத்தில் இருந்த நுாற்றுக்கணக்கான சிசிடிவி கேமரா பதிவுகள் உதவியுள்ளன.
மேலும் இந்த கோர சம்பவத்தை அரங்கேற்றியவர்களுக்கு புல்வாமா தாக்குதலுடன் நேரடி தொடர்பு இருக்கலாம் என்றும் புலனாய்வு அமைப்பினர் சந்தேகத்தை வெளிப்படுத்தி இருக்கின்றனர். பார்க்கிங்கில் ஏன் கார் நிறுத்தப்பட்டிருந்தது; அவ்வாறு நின்றிருந்த நேரத்திலும் வெடிபொருட்களுடன் இருந்ததா என்ற கேள்விகளுக்கு புலனாய்வு அமைப்பினர் விடை தேடி வருகின்றனர்.
எல்லா பயங்கரவாதிகளும் ஒரே மதத்தைச் சேர்ந்தவர்கள். அவர்கள் ஒருபோதும் தங்கள் மனதை மாற்றிக்கொள்ள மாட்டார்கள். அரசாங்கம் அனைத்து பயங்கரவாதிகளையும் சுட்டுக் கொல்ல வேண்டும். மன்னிக்கவே முடியாது. அவர்கள் 10 பேரைக் கொன்றார்கள். அவர்களின் 10 பேர் குடும்பத்திற்கும் குழந்தைகளுக்கும் யார் பொறுப்பு? எதிர்காலத்தில் இஸ்லாமிய கடைகளில் எதையும் வாங்குவதை நிறுத்துங்கள். விலை மலிவாக இருந்தால், அவர்களிடமிருந்து வாங்க வேண்டாம். பயங்கரவாதக் குழுவிற்கு சாதாரண மக்கள் கொடுக்கக்கூடிய தண்டனை இது.
மத்திய அரசின் இப்போதைய அவசர வேலை, பாகிஸ்தான் தீவிரவாதிகளை கூட பின்பு பார்த்துக் கொள்ளலாம். உள் நாட்டில் இருக்கும் சில கட்சி தலைவர்கள், தேசப் பற்று இல்லாத ஐந்தாம் படைகளை போட்டுத் தள்ள வேண்டும்.
குண்டு வெடிக்கும் முன்னாடி உளவுத்துறை எங்க இருந்ததுன்னு சொல்லுங்க
கண்டிப்பாக ஓங்கோலில் இல்லை, கோபாலபுரத்தில் இருந்ததா தெரில
அது பத்திரமான இடத்தில் இருந்தது.