அயர்லாந்து நிதான ஆட்டம்
சைல்ஹெட்: வங்கதேசத்திற்கு எதிரான முதல் டெஸ்டில் அயர்லாந்து அணி நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தியது.
வங்கதேசம் சென்றுள்ள அயர்லாந்து அணி இரு போட்டி கொண்டு டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதல் டெஸ்ட் நேற்று சைல்ஹெட் நகரில் துவங்கியது. 'டாஸ்' வென்ற அயர்லாந்து அணி பேட்டிங் தேர்வு செய்தது.
ஸ்டெர்லிங் அரைசதம்
அயர்லாந்து அணிக்கு கேப்டன் பால்பிர்னி, ஸ்டெர்லிங் ஜோடி துவக்கம் கொடுத்தது. பாலர்பிர்னி, ஹசன் மகமுது வீசிய முதல் ஓவரின் 4வது பந்தில் 'டக்' அவுட்டானார். பின் ஸ்டெர்லிங், கார்மைக்கேல் இணைந்தனர். இருவரும் அரைசதம் அடித்தனர். 2வது விக்கெட்டுக்கு 96 ரன் சேர்த்த போது, ஸ்டெர்லிங் (60) அவுட்டானார். கார்மைக்கேல், 59 ரன்னில் அவுட்டானார்.
கேம்பெர் (44), டக்கர் (41) அணிக்கு கைகொடுத்தனர். பின் வரிசையில் ஜோர்டான் நெய்ல், 30 ரன் எடுத்து உதவினார். அயர்லாந்து அணி முதல் நாள் முடிவில் முதல் இன்னிங்சில் 8 விக்கெட்டுக்கு 270 ரன் எடுத்திருந்தது. மெக்கர்த்தி (20), அவுட்டாகாமல் இருந்தார். வங்கதேசத்தின் சார்பில் மெஹிதி ஹசன் மிராஜ் 3, ஹசன் மகமுது 2 விக்கெட் சாய்த்தனர்.