சபரிமலை கோவில் தங்கம் மாயமான விவகாரம்: தேவசம்போர்டு முன்னாள் தலைவர் கைது
திருவனந்தபுரம்: சபரிமலை கோவிலில் தங்கம் மாயமான விவகாரத்தில் தேவசம்போர்டு முன்னாள் தலைவர் வாசுவை சிறப்பு புலனாய்வு பிரிவு அதிகாரிகள் கைது செய்தனர். இந்த வழக்கில் கைது செய்யப்படும் 3வது நபர் இவர் ஆவார்.
கேரளாவில் உள்ள சபரிமலை கோவில் மிகவும் பிரசித்தி பெற்றது. இக்கோவிலின் துவாரபாலகர்கள் சிலையில் இருந்து, 4 கிலோ தங்கம் மாயமானதாக புகார் எழுந்த நிலையில், தேவசம் போர்டு அதிகாரிகள் ஒன்பது பேர் மீது நடவடிக்கை எடுக்கப் பட்டுள்ளது.
மேலும், தங்கமுலாம் பூசும் செலவை ஏற்ற, கர்நாடக மாநிலம் பெங்களூரைச் சேர்ந்த தொழிலதிபர் உன்னிகிருஷ்ணன் போத்தி என்பவரிடமும் விசாரணை நடந்துள்ளது.இந்த விவகாரம் குறித்து கேரள உயர் நீதிமன்றம் நியமித்த சிறப்பு புலனாய்வு குழு தீவிரமாக விசாரணை நடத்தி வருகிறது. மறு புறம் தேவசம் போர்டின் ஊழல் கண்காணிப்பு பிரிவு விசாரணை நடத்தி வருகிறது. இறுதி விசாரணை அறிக்கையை கேரள உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளது.
துவாரபாலகர்கள் சிலைகள் மற்றும் கோவில் கதவுகளில் தங்கம் மாயமானது தொடர்பான அந்த இரு வழக்குகளிலும், தொழிலதிபர் உன்னிகிருஷ்ணன் போத்தி மற்றும் தேவஸ்தான முன்னாள் நிர்வாக அதிகாரி முராரி பாபு ஆகியோரை சிறப்பு புலனாய்வு குழுவினர் விசாரணைக்கு பிறகு கைது செய்தனர்.
இந்நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக தேவசம்போர்டு முன்னாள் தலைவர் வாசுவிடம் சிறப்பு புலனாய்வு அதிகாரிகள் விசாரணை நடத்தி வந்தனர். இதன் முடிவில் வாசுவை அதிகாரிகள் கைது செய்தனர். இதனை மாநில டிஜிபி உறுதி செய்துள்ளார். இந்த வழக்கில் கைது செய்யப்படும் 3வது நபர் வாசு ஆவார்.
ஒவ்வொரு மாநிலத்திலும் நீதி மன்றம் அமைத்த குழு இருந்தால் மட்டும் அதில் நடவடிக்கை. இல்லை என்றால் பல வழக்குகள் மூடுவிழா என்று முடிக்கப்படும்
தேவசம் போர்டை சுயாட்சி கொண்ட அமைப்பாக்கி திருவாங்கூர் மஹாராஜா அவர்களை தலைவர் ஆக நியமிக்க வேண்டும்... அவருக்கு முழு சுதந்திரம் தர வேண்டும்.. கடவுளின் தேசம் மீண்டும் பிரகாசிக்கும்.
இவர்களுக்கு கொஞ்சம் கூட மனசாட்சி இருக்காதா? இவர்களால் எப்படி நிம்மதியாக தூங்க முடிகிறது? கம்யூனிஸ்ட் கொள்கையே எல்லாரும் பிச்சைக்காரனா இருக்கணும்ங்குறதுதான். பிராக்டிகலா
தெய்வ காரியங்களில் திருட்டை ஆண்டவர் குடும்பத்தில் சரியான தண்டனை கொடுப்பார்!
தேவசம்போர்டு முன்னாள் தலைவர் வாசு ..... ஹிந்துதானே ????
இந்து என்றாலும் அந்நிய பாலைவன மூர்க்கம் மதமாதிரி திருட்டு கும்பலுக்கும் பயங்கரவாத கும்பலுக்கும் இந்துக்கள் யாரும் கேவலமான முட்டு கொடுப்பதில்லை
பாவம் குரானில் சொன்னபடி நடந்து தான் இப்படி ஆனார்
திருட்டுக்கு சம்பந்தம் இல்லாத பிற மத கிண்டலை நிறுத்திக் கொள்வாயா?
கம்மியும் சேட்டனும் சேர்ந்தால் நல்லது எப்படி நடக்கும்.
கடவுளோட சொந்த நாட்டின் நிலைமை. இதற்கெல்லாம் காரணம் இரண்டு கட்சிகள் மட்டும் பரம்பரை பரம்பரையாக மாநிலத்தை ஆணடுகொண்டு தேவசம் போர்டு என்ற போர்வையில் கொள்ளையடித்து வருகிறது.
வேட தாரி திருட்டு கம்யூயுனிஸ்டுகளின் களி ஆட்டம் நிறுத்தவேண்டும் .
Must have learnt lessons from DMK tamil nadu great
கலிகாலம். கடவுள் சொத்தை ஆட்டையபோடுறானுகமேலும்
-
அர்ஜுன், பிரக்ஞானந்தா 'டிரா' * உலக கோப்பை செஸ் தொடரில்...
-
அந்த நாள் ஞாபகம்... * உலக விளையாட்டு செய்திகள்
-
2026 ம் ஆண்டுக்கான விடுமுறை நாட்கள்: தமிழக அரசு அறிவிப்பு
-
போலீஸ் வாகனம் மோதி ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் பலி
-
டில்லியில் தாக்குதல் நடத்த பரிதாபாத்தில் உண்டான சதி
-
பீஹார் வரலாற்றில் சிறப்பான சட்டமன்ற தேர்தல்: தலைமை தேர்தல் கமிஷனர்