பூமிக்குள் புதைத்து வைத்திருந்த 10 கிலோ குட்கா பறிமுதல்

விழுப்புரம்: கண்டாச்சிபுரம் அருகே பெட்டி கடை பின்புறத்தில் பதுக்கி வைத்திருந்த 10 கிலோ குட்காவை போலீசார் பறிமுதல் செய்தனர்.

விழுப்புரம் மாவட்டம், கண்டாச்சிபுரம் அருகே மேல்வாலை பகுதியில் குட்கா விற்பதாக கிடைத்த தகவலின் பேரில், இன்ஸ்பெக்டர் மூர்த்தி, சப் இன்ஸ்பெக்டர் நவீன்குமார் மற்றும் போலீசார் நேற்று நேரில் சென்று சோதனை நடத்தினர். அப்போது, மேல்வாலை மெயின் ரோட்டில் உள்ள சண்முகம் மகன் மணிகண்டன்,39; என்பவரது பங்க் கடையில் சோதனை மேற்கொண்டதில், குட்கா பொட்டலங்கள் இருந்ததை கைப்பற்றினர். பிறகு, கடையின் பின்புறத்தில் பூமிக்கு அடியில் பதுக்கி வைத்திருந்த 10 கிலோ அளவிலான குட்காவை பறிமுதல் செய்தனர். இது குறித்து, வழக்கு பதிந்த கண்டாச்சிபுரம் போலீசார், மணிகண்டனை கைது செய்தனர்.

Advertisement