வாக்காளர் கணக்கெடுப்பு படிவம் 5.62 கோடி பேருக்கு வினியோகம்

சென்னை: தமிழகத்தில் வாக்காளர் கணக்கெடுப்பு படிவத்தை, 5.62 கோடி பேருக்கு,தேர்தல் கமிஷன் வினியோகம் செய்துள்ளது.

தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்த பணியை, தேர்தல் கமிஷன் துவக்கி உள்ளது. முதற்கட்டமாக, வாக்காளர்கள் கணக்கெடுப்பு பணி நடக்கிறது. இதற்கான படிவத்தை, வாக்காளர்களுக்கு வழங்கும் பணியில், 68,467 ஓட்டுச்சாவடி அலுவலர்கள் ஈடுபட்டுள்ளனர். இதுவரை 5.62 கோடி வாக்காளர்களுக்கு, கணக்கெடுப்பு படிவம் வினியோகம் செய்யப்பட்டுள்ளது. இது, 87.6 சதவீதமாகும். தமிழகத்தில், 6.41 கோடி வாக்காளர்கள் உள்ளனர். எஞ்சியுள்ள வாக்காளர்களுக்கும் கணக்கெடுப்பு படிவம் வினியோகம் செய்யும் பணியை, ஒரு வாரத்திற்குள் முடிக்க இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

Advertisement