மதுபாட்டில் பதுக்கி விற்ற வாலிபர் கைது

பெண்ணாடம்: பெண்ணாடம் அருகே அனுமதியின்றி டாஸ்மாக் மதுபாட்டில்கள் பதுக்கி வைத்து விற்ற வாலிபரை போலீசார் கைது செய்தனர்.


பெண்ணாடம் சப் இன்ஸ்பெக்டர் பாக்கியராஜ் தலைமையிலான போலீசார் நேற்று காலை ரோந்து சென்றனர். அப்போது, பெ.பொன்னேரி டாஸ்மாக் அருகே கள்ளத்தனமாக டாஸ்மாக் மதுபாட்டில்களை பதுக்கி வைத்து விற்ற பெண்ணாடம், சோழன் நகர் வேல்முருகன் மகன் தமிழ்இனியன், 26; என்பவரை கைது செய்து, அவரிடமிருந்த 6 மதுபாட்டில்கள், பைக் மற்றும் 2 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.

Advertisement