மேகதாது அணைக்கு நீதிமன்றத்தை நாடாதது ஏன்  நயினார் நாகேந்திரன் கேள்வி

விருதுநகர்: எஸ்.ஐ.ஆர்.,யை எதிர்த்து நீதிமன்றம் செல்லும் முதல்வர் ஸ்டாலின், காவிரியில் குறுக்கே மேகதாது அணை கட்டுகின்றனர். அதற்கெல்லாம் நீதிமன்றத்தை நாடாதது ஏன் என விருதுநகரில்பா.ஜ., மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கேள்வி எழுப்பினார்.

மேலும் அவர் கூறியதாவது: தி.மு.க., அரசு எதை எடுத்தாலும் எதிர்ப்பு செய்கின்றனர். குடியுரிமை சட்டத்திற்கும் எதிர்ப்பு தெரிவித்தனர். தேவையில்லாத விஷயங்களுக்கு முதல்வர் நீதிமன்றம் செல்கிறார். காவிரியில் குறுக்கே மேகதாது அணை கட்டுகின்றனர். அதற்கெல்லாம் நீதிமன்றத்தை நாடலாமே. இறந்தவர்கள், வெளியூர் சென்றவர்கள் ஓட்டுக்களை நீக்க வேண்டும். புதிதானவர்களை சேர்க்க வேண்டும். இவ்வளவு தான் எஸ்.ஐ.ஆர்.,

இ.குமாரலிங்கபுரம் ஜவுளி பூங்கா திட்டத்தை மத்திய அரசு கொண்டு வந்ததாலயே மாநில அரசு சொதப்பி வருகிறது. ஒவ்வொரு குக்கிராமத்திலும் கஞ்சாவுக்கு டீலர் இருக்கின்றனர், என்றார்.

Advertisement