வாடும் பயிர்கள்: நீர் பாய்ச்ச போராடும் விவசாயிகள்
திருப்புத்துார்: திருப்புத்துார் பகுதி கிராமங்களில் பரவலாக ஒரு மாதத்திற்கு முன்னர் செய்த நடவு மற்றும் விதைப்பு பயிர்கள் தொடர்ந்து மழையின்றி வாடும் சூழலில் உள்ளது. கண்மாய்களிலும் போதிய நீர் இல்லாததால் வயலுக்கு நீர் பாய்ச்ச முடியாமல் விவசாயிகள் தவிக்கின்றனர்.
என்.புதூர், பனையம்பட்டியில் கண்மாய் கரையில் மோட்டார் வைத்து கண்மாயிலிருந்து நீர் எடுத்து வயலுக்கு பாய்ச்சி வருகின்றனர். மணிக்கு ரூ. 200லிருந்து கட்டணம் வசூலிக்கப்படுகிறது. அதுவும் சில நாட்கள் மட்டுமே தண்ணீரை பாய்ச்ச முடியும். தாமதமாக விதைத்தவர்கள் தண்ணீர் இன்றி உரம் போட முடியாமலும் தவிக்கின்றனர்.
விவசாயிகள் கூறுகையில், மழையில்லாமல் ஆவணி கடைசியில் தான் விதைப்பு செய்தோம். பிறகு ஒரு மழை தான் நன்றாக பெய்தது. பிறகு சரியான மழை இல்லை. தற்போது வயலில் உள்ள ஈரப்பதத்தில் பயிர்கள் தாக்குப்பிடிக்கின்றன. அடுத்த சில நாட்களில் மழை பெய்தால் நல்லது. பனி அதிகரித்தால் பயிர்கள் வளர்ச்சி பாதித்து சுருங்கத் துவங்கி விடும்' என்று கவலை தெரிவித்தனர்.
வேளாண்துறையினர் கூறுகையில், 'விவசாயிகள் பயிரைக்காப்பாற்ற நிலத்தடிநீர், இருக்கும் கண்மாய் நீரை பாய்ச்சி சமாளித்து வருகின்றனர். மழை பெய்தால் தான் பயிர் செழிப்புடன் வளர்ந்து நல்ல மகசூலைத்தரும்.' என்றனர்.
மேலும்
-
காஷ்மீரில் போலீஸ் ஸ்டேஷனில் வெடிகுண்டு வெடித்ததில் 7 பேர் பலி; 30 பேர் காயம்
-
ஐந்து மாவட்டங்களில் நாளை கனமழை
-
தொழில்நுட்ப பிரச்னை காரணமாக புதுச்சேரி - ைஹதராபாத் விமானம் ரத்து
-
கத்தியை காட்டி மிரட்டல் 4 வாலிபர்கள் கைது
-
நெல்லித்தோப்பு தொகுதியில் போட்டி ஓம்சக்தி சேகர் திட்டவட்டம்
-
பிள்ளையார்பட்டியில் சுகாதாரத்துறை ஆய்வு