கத்தியை காட்டி மிரட்டல் 4 வாலிபர்கள் கைது

புதுச்சேரி: கத்தியை காட்டி, பொதுமக்களை மிரட்டிய 4 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.

ரெட்டியார்பாளையம் போலீசார் நேற்று முன்தினம் இரவு ரோந்து சென்றனர். அப்போது உழவர்கரை வயல்வெளி நகரில், இரு வாலிபர்கள் கத்தியை காட்டி, பொதுமக்களை மிரட்டுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

அங்கு சென்ற போலீசார், கத்தியுடன் நின்ற இரண்டு பேரை பிடித்து விசாரித்தனர். உழவர்கரை வயல்வெளி நகரை சேர்ந்த பிரேம்குமார், 20; புவனேஷ், 22; என்பது தெரியவந்தது. இருவரையும் கைது செய்து, அவர்களிடமிருந்து கத்தியை பறிமுதல் செய்தனர்.

மேலும், மூலக்குளம் பகுதியில் கத்தியை காட்டி பொதுமக்களை மிரட்டிய, மூலக்குளம் ஜே.ஜே. நகரை சேர்ந்த கிதியோன், 21; மரி அபியூத், 24; ஆகிய இவரையும் போலீசார் கைது செய்து, அவர்கள் வைத்திருந்த கத்தியை பறிமுதல் செய்தனர்.

Advertisement