பிள்ளையார்பட்டியில் சுகாதாரத்துறை ஆய்வு

திருப்புத்துார்: பிள்ளையார்பட்டியில் கடைகளில் புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறதா என சுகாதாரத்துறையினர் ஆய்வு செய்தனர். வட்டார சுகாதார மேற்பார்வையாளர் சோமசுந்தரம், சுகாதார ஆய்வாளர் ஹரிஹரன் சுதன் ஆய்வு செய்தனர். தேநீர் துாளில் கலப்படம், உணவுப் பொருட்களின் தரம், பாலிதீன் பைகள் பயன்பாடு குறித்து ஆய்வு செய்தனர். தடை செய்யப்பட்ட 2 கிலோ பிளாஸ்டிக் பைகளை கைப்பற்றினர்.

Advertisement