பயணிகள் தவிப்பு மாற்று பாதையில் ரயில்கள் இயக்கம் மதுரை செல்ல முடியாத அவலம்
ராஜபாளையம்: மதுரை ரயில்வே கோட்ட சீரமைப்பு பணிகளை காரணமாக கூறி விருதுநகர் மாவட்ட பயணிகளின் முக்கிய வழித்தடமான மதுரைக்கு செல்லாமல் மாதக்கணக்கில் மாற்றுப்பாதையில் இயக்கப்படுவதால் பயணிகள் பரிதவிப்பிற்கு உள்ளாகின்றனர். விருதுநகர் மாவட்டத்தில் ராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்துார், சிவகாசி, விருதுநகர் ரயில் பயணிகளுக்கு மதுரை முக்கிய வழித்தடமாக இருந்து வருகிறது. இது கல்வி, தொழில், மருத்துவம், சுற்றுலா, ஆன்மிகம் என முக்கிய பகுதியாக இருந்து வருகிறது.
மதுரை கோட்டத்தில் ரயில்களை 130 கி. மீ., வேகத்தில் இயக்குவதற்காக தண்டவாள சீரமைப்பு பணிகள் நடந்து வருகிறது. இதற்காக கூடல் நகர்- ,சமயநல்லுார், -சோழவந்தான் பிரிவில் தினமும் நான்கு மணி நேரம் பராமரிப்பு நடைபெறுகிறது. இதற்காக விருதுநகர் மாவட்டத்தில் இருந்து தினசரி ரயிலான செங்கோட்டை- மயிலாடுதுறை எக்ஸ்பிரஸ் வழித்தடம் மாற்றப்பட்டு விருதுநகர், அருப்புக்கோட்டை, மானாமதுரை, காரைக்குடி வழியாக மாற்றுப்பாதையில் இயக்கப்படுகிறது.
பல மாதங்களாக இது போன்ற அறிவிப்பினால் ராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்துார், சிவகாசி, பயணிகள் மதுரை செல்வதற்கு விருதுநகர் இறங்கி பஸ்களில் பயணிக்கின்றனர். இத்துடன் குருவாயூர் சென்னை ரயிலும் மாற்று பாதையில் இயக்கப்படுகிறது.
விருதுநகர் மாவட்ட மக்கள் காலை நேரத்தில் மதுரை செல்லாமல் பல மாதங்களாக பெரும்பாலான நாட்களில் மானாமதுரை, சிவகங்கை வழியாக மாற்றுப்பாதையில் இயக்கப்படுவதால் சிரமம் ஏற்படுகிறது. முடிவில்லாமல் தொடரும் இந்த அறிவிப்பினால் ரயில் போக்குவரத்தை நம்பியுள்ள பயணிகள் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர்.
பணிகள் முடிவடையும் வரை ராஜபாளையம் வழியாக செங்கோட்டையிலிருந்து மதுரைக்கு கூடுதலாக புதிய ரயில் இயக்க வேண்டும் என்பதே பயணிகளின் எதிர்பார்ப்பாக உள்ளது.
மேலும்
-
தொழில்நுட்ப பிரச்னை காரணமாக புதுச்சேரி - ைஹதராபாத் விமானம் ரத்து
-
கத்தியை காட்டி மிரட்டல் 4 வாலிபர்கள் கைது
-
நெல்லித்தோப்பு தொகுதியில் போட்டி ஓம்சக்தி சேகர் திட்டவட்டம்
-
பிள்ளையார்பட்டியில் சுகாதாரத்துறை ஆய்வு
-
வாடும் பயிர்கள்: நீர் பாய்ச்ச போராடும் விவசாயிகள்
-
பா.ஜ., பிரமுகர் கொலை வழக்கு : என்.ஐ.ஏ., கிடுக்கிப்பிடி விசாரணை