கொடுக்கல் வாங்கல் தகராறில் கொலை இருவர் போலீசில் சரண்

காரியாபட்டி: காரியாபட்டியில் கொடுக்கல் வாங்கல் தகராறில் நண்பன் மணிகண்டனை 33, கொலை செய்த பாரதிராஜ், விக்னேஷ் ஆவியூர் போலீசில் சரணடைந்தனர்.

மதுரை மாவட்டம், பெரிய உலகாணியைச் சேர்ந்தவர் மணிகண்டன் 33, ஜே.சி.பி., டிரைவராக வேலை பார்த்தார். விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி ஆவியூர் கடமங்குளம் அருகே உள்ள பஞ்சர் கடைக்கு அடிக்கடி வந்து சென்றார். அதே கடைக்கு மதுரை மாவட்டம், திருமங்கலம் கொக்குளம் பாரதிராஜ் 35, மேல உப்பிலிக்குண்டு விக்னேஷ் 34, வந்தனர். மூவருக்கும் பழக்கம் ஏற்பட்டு, நண்பர்களாகி, அடிக்கடி மது குடித்தனர்.

அப்போது மணிகண்டன், அவர்கள் இருவரிடமும் பணம் வாங்கினார். இதையடுத்து கொடுக்கல் வாங்கல் தகராறு இருந்தது. அக்.29ல் வெளியில் சென்ற மணிகண்டன் வீடு திரும்பவில்லை. அவரது தாயார் லட்சுமிஅம்மாள் நவ.10ல் ஆவியூர் போலீசில் புகார் கொடுத்தார். போலீசார் தீவிரமாக விசாரித்து வருவதை அறிந்து இருவரும் ஆவியூர் போலீசில் சரணடைந்தனர்.

பஞ்சர் கடையில் மூவரும் மது அருந்திய போது, ஏற்பட்ட தகராறில் மணிகண்டனை இருவரும் சேர்ந்து கொலை செய்து, கொக்குளம் அருகே பாலத்தில் வீசிவிட்டு சென்றதாக தெரிவித்தனர். உடல் தலை துண்டிக்கப்பட்டு கிடந்தது. உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். போலீசார் தேடி வருகின்றனர்.

Advertisement