மூத்த தம்பதிகள் கோவிலில் கவுரவிப்பு
கடலுார்: கடலுார், புதுப்பாளையம் ராஜகோபால சுவாமி கோவிலில் மூத்த தம்பதிகளுக்கு சிறப்பு செய்யும் நிகழ்ச்சி நடந்தது.
ஹிந்து சமய அறநிலையத் துறை சார்பில், 70 வயது பூர்த்தி அடைந்த மூத்த தம்பதியருக்கு 'சிறப்பு செய்யும் திட்டம்' கடலுார், புதுப்பாளையம் ராஜகோபால சுவாமி கோவிலில் நடந்தது.
கோவில் செயல் அலுவலர் சரவண ரூபன், 5 மூத்த தம்பதிகளுக்கு புடவை, வேட்டி, சட்டை, வளையல், தாம்பூலம் என, 11 வகை பொருட்கள் கொண்ட சிறப்பு தொகுப்பு வழங்கினார்.
தொடர்ந்து, கோவிலில் சிறப்பு வழிபாடு நடந்தது. கணக்கர்கள் தீனதயாளன், சண்முகம், பட்டாச்சாரியார்கள் பிரபு, நரசிம்மன் உடனிருந்தனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
தொழில்நுட்ப பிரச்னை காரணமாக புதுச்சேரி - ைஹதராபாத் விமானம் ரத்து
-
கத்தியை காட்டி மிரட்டல் 4 வாலிபர்கள் கைது
-
நெல்லித்தோப்பு தொகுதியில் போட்டி ஓம்சக்தி சேகர் திட்டவட்டம்
-
பிள்ளையார்பட்டியில் சுகாதாரத்துறை ஆய்வு
-
வாடும் பயிர்கள்: நீர் பாய்ச்ச போராடும் விவசாயிகள்
-
பா.ஜ., பிரமுகர் கொலை வழக்கு : என்.ஐ.ஏ., கிடுக்கிப்பிடி விசாரணை
Advertisement
Advertisement