ஐந்து மாவட்டங்களில் நாளை கனமழை
சென்னை: 'தமிழகத்தில் மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை மாவட்டங்களில் நாளை கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது' என, வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அதன் அறிக்கை:
நேற்று காலை வரையிலான 24 மணி நேரத்தில், ராமநாதபுரம் மாவட்டம், மண்டபம் பகுதியில் 7 செ.மீ., மழை பெய்துள்ளது. இதற்கு அடுத்தபடியாக, ராமநாதபுரம், பாம்பன் மற்றும் நீலகிரி மாவட்டம் அழகரை எஸ்டேட் பகுதிகளில் தலா, 5 செ.மீ., மழை பெய்துள்ளது.
தென் இலங்கை மற்றும் அதை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல், ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. தமிழகத்தில் சில இடங்கள் மற்றும் புதுச்சேரியில் இன்றும், நாளையும் இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. நவ., 20 வரை, தமிழகத்தின் சில இடங்களில் மிதமான மழை தொடர வாய்ப்புள்ளது.
மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை மாவட்டங்களில் சில இடங்களில் நாளை கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலுார், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் நாளை மறுநாள் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டமாக காணப்படும்; சில இடங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
மேலும்
-
நேற்றைய தினம் போக்சோ வழக்குகளில் கைதானவர்கள்!
-
போக்குவரத்து விதிமீறல் ரூ.200 கோடி அபராதம் வசூல்
-
அனைத்து பஸ்களிலும் அவசர கதவு கட்டாயம்
-
துங்கபத்ரா தண்ணீர் திறக்க சிவகுமார் மறுப்பு
-
குழந்தைகள் அதிகம் சாப்பிடும் 'பெங்கால் வெஜ் சாப்ஸ்'
-
முட்டாள்தனத்தில் இருந்து விலகியே இருங்கள்! மாணவர்களுக்கு முதல்வர் சித்து அறிவுரை