தமிழகம் வேண்டாம்; தொழில் தொடங்க ஆந்திரா தான் சரியான இடம்; ஜகா வாங்கியது தென்கொரிய நிறுவனம்
சென்னை: தென்கொரியாவை சேர்ந்த பிரபல காலணி நிறுவனம் தமிழகத்தில் தொழில் தொடங்க புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து இருந்தது. தற்போது வாபஸ் பெற்று கொண்டு ஆந்திராவில் தொழிற்சாலை அமைக்க உள்ளதாக அறிவித்துள்ளது.
தென்கொரியாவை
சேர்ந்த வாசவுங் பன்னாட்டு நிறுவனம் காலணிகளை உற்பத்தி செய்து வருகிறது.
இந்த நிறுவனம் அடிடாஸ் உள்ளிட்ட பிரபல நிறுவனங்களுக்கு சப்ளையராக இருந்து
வருகிறது. கடந்த ஆகஸ்ட் மாதம், இந்த நிறுவனம் தமிழகத்தில் காலணிகளை
உற்பத்தி செய்ய தொழிற்சாலை அமைக்க, தமிழக அரசுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம்
போட்டு இருந்தது. ரூ.1720 கோடி மதிப்பிலான இந்த திட்டத்தால் 20 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என
அந்நிறுனம் அறிவித்து இருந்தது.
இது தொடர்பாக தமிழக தொழில் துறை அமைச்சர் டிஆர்பி ராஜா சமூக வலைதளத்தில் பதிவிட்டு இருந்தார். தற்போது
இந்த நிறுவனம் தனது புரிந்துணர்வு ஒப்பந்தத்தை வாபஸ் பெற்று கொண்டது.
ஆந்திரா மாநிலம் குப்பத்தில் தொழிற்சாலை அமைக்க, ஆந்திர அரசுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து உள்ளது. முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் சட்டசபை
தொகுதியான குப்பத்தில் தொழிற்சாலை அமைக்க முடிவு செய்துள்ளது.
இது
குறித்து அந்த நிறுவனம் கூறியதாவது: இந்த ஆலையில் ஆண்டுக்கு 2 கோடி ஜோடி விளையாட்டு காலணிகளை உற்பத்தி செய்ய திட்டமிட்டுள்ளோம். குப்பத்தில்
உள்ள இரண்டு கிராமங்களில் 100 ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட்டுள்ளது. நாங்கள் தொழிற்சாலை அமைப்பது தொடர்பாக
தமிழகம் மற்றும் ஆந்திர அரசுடன் பேச்சு நடத்தி வந்தோம்.
தற்போது
நீண்ட ஆலோசனைக்கு பிறகு ஆந்திராவில் அமைக்க முடிவு செய்து இருக்கிறோம்.
முதலீடு செய்வதற்காக, நாங்கள் பல்வேறு நாடுகளை மதிப்பீடு செய்தோம். இந்தியா
மிகவும் உறுதியளிக்கிறது. ஏனென்றால் அது ஒரு பெரிய இளம் மக்கள்தொகையையும்
நல்ல கல்வி முறையையும் கொண்டுள்ளது. பயிற்சி பெற்ற பொறியாளர்கள் எங்கள்
வணிகத்திற்கு முக்கியம். இவ்வாறு அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்தியாவில்
இந்த நிறுவனம் செய்யும் முதல் முதலீடாக இது இருக்கும். தென் கொரியா,
தைவான், வியட்நாம், இந்தோனேசியா மற்றும் சீனாவில் மட்டும் இந்த நிறுவனம்
இயங்கி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
ஹி...ஹி...ஹி...அதெல்லாம் ஒன்றும் இல்லை, கட்டுமர திருட்டு திமுகவின் தலைமை குடும்பம் தொழிலில் முப்பது சதவீத பங்கை தங்களுக்கு கொடுக்குமாறு சொல்லியிருக்கும், அதான் தென் கொரியாகாரன் எடுத்தேன் பாரு ஓட்டம்னு ஓடிட்டான்.
The primary reason for this issue is the unfinished NH48 road and the restricted lanes on GST. NH48 is delayed for more than 6 years, and at some point the overbridges are yet to start. Commuters are paying the full toll fee at Sriperumbudur, but the road travel between Poonamallee and Walaraja is a nightmare. No business people will accept this kind of delay, and I personally heard negative comments from the CEO of an existing Korean company. The time delay in personnel transport and cargo movement has a huge impact on their mindset, and they try to look for a better place. Both the central and state governments should take it seriously, complete the project of NH48, and increase the lanes in GST.
டீ ஆர் பீ ராஜா இதுக்கு வேற எதாச்சும் திசை திருப்பும் வேலையை செய்வார். எப்படி வெள்ளை பேப்பரை காட்டி நையாண்டி செய்தார்...
அங்க நாயுடு இங்க சுடாலின் எப்படி தமிழ் நாட்டுக்கு முதலீடு வரும் ?
மூஞ்சியை பார்த்தே பயந்து போய் துண்டைக்காணோம், துணியைக்காணோம் என ஓடிவிட்டார்கள்.
லஞ்ச வியாபாரம் படியாமல் ஆந்திராவுக்கு போகுது! தமிழ் நாட்டு தொழில் துறை கவனிப்பு லட்சணம் அப்படி?
சோனா முத்தா இதுவும் போச்சாடா.....
35% கமிஷன் யார் தருவார்கள்
நேர்மை யாக தொழில் செய்பவர்கள் வர மாட்டார்கள்
கமிஷன் கலெக்ஷன் காரப்ட்டின் இது தாண்ட திராவிட மாடல்
திமுக அரசு பற்றி உலகம் எங்கும் தெரிகிறது
விடியலுக்கு பங்கு, கமிஷன் கொடுத்து கட்டுப்படி ஆகாதுமேலும்
-
யாத்திரையின் போது மாயமான சீக்கிய பெண்.. பாகிஸ்தானில் மதமாற்றம் செய்து திருமணம்
-
20 ஆயிரம் பேருக்கான வேலைவாய்ப்பு நழுவிவிட்டது: அண்ணாமலை கொந்தளிப்பு
-
பீஹார் தேர்தல் முடிவுக்கு எஸ்ஐஆர்-ஐ காரணம் சொல்வது துரதிர்ஷ்டவசமானது: ஒவைசி காட்டம்
-
அண்ணா பல்கலை 'சார்'ஐ விட இது பயங்கரமான 'சார்' இல்லை: நயினார் நாகேந்திரன்
-
வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு; நவம்பர் 17ல் 6 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலெர்ட்
-
காஷ்மீர் போலீஸ் ஸ்டேஷனில் நிகழ்ந்த சம்பவம் தற்செயலானது: உறுதி செய்தது மத்திய அரசு