பீஹார் தேர்தல் முடிவு தந்த பாடம்: அரசியல், குடும்பம் இரண்டுக்கும் 'குட்பை' சொன்ன லாலு வாரிசு
பாட்னா: பீஹார் தேர்தல் தோல்விக்கு பொறுப்பேற்று, அரசியலில் இருந்து விலகுவதாக லாலுவின் மகளும், கட்சியின் நிர்வாகியுமான ரோகிணி ஆச்சார்யா அறிவித்துள்ளார்.
பீஹார் தேர்தல் படுதோல்வி எதிர்க்கட்சிகளை கலகலக்க வைத்துள்ளது. குறிப்பாக ராஷ்டிரிய ஜனதா தளத்தில் பல்வேறு முணுமுணுப்புகள் வெளிவர ஆரம்பித்துள்ளன.
தோல்விக்கு யார் பொறுப்பேற்றுக் கொள்வது என்ற கேள்விகள் எழுந்த நிலையில், அனைத்து பழிகளையும் ஏற்றுக் கொள்வதாகவும், அரசியலில் இருந்து விலகுவதாகவும் லாலு மகள் ரோகிணி ஆச்சார்யா அறிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் தமது எக்ஸ் வலை தள பக்கத்தில் பதிவிட்டு உள்ளதாவது;
நான் அரசியலை விட்டு விலகுகிறேன். என் குடும்பத்தையும் துறக்கிறேன். சஞ்சய் யாதவ், ரமீசும் இதைச் செய்ய சொன்னார்கள். அனைத்து பழியையும் நானே ஏற்றுக் கொள்கிறேன்.
இவ்வாறு அவர் தமது பதிவில் கூறி உள்ளார்.
@block_B@
@quote@ரோகிணி ஆச்சார்யா யார்? quote
பீஹார் முன்னாள் முதல்வர், ராஷ்டிரிய ஜனதா தள தலைவர் லாலுவுக்கு மொத்தம் 9 வாரிசுகள். அவர்களில் 7 பேர் மகள்கள். இரண்டு மகன்கள்.
இவர்களில் 2வது மகள் தான் ரோகிணி ஆச்சார்யா. அடிப்படையில் இவர் ஒரு தொழில்முறை மருத்துவர். 2022ம் ஆண்டில் தந்தை லாலுவுக்கு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை நடந்தது. அப்போது தந்தைக்காக ரோகிணி ஆச்சார்யா தமது சிறுநீரகத்தை தானமாக வழங்கினார்.
லாலுவின் மகன்கள் தேஜஸ்வி யாதவ், தேஜ்பிரதாப் யாதவ் இருவரும் அரசியலில் உள்ள சூழலில், ரோகிணியும் அரசியலில் குதித்தார். 2024ம் ஆண்டு லோக்சபா தேர்தலில் சரண் தொகுதி எம்பி வேட்பாளராக போட்டியிட்டு, பாஜவின் மூத்த தலைவர் ராஜிவ் பிரதாப் ரூடியிடம் தோல்வி அடைந்தவர்.
block_B
குடும்பத்தையும் துறக்கிறேன் என்றால்??
லாலு வாரிசு ரோகிணி அடுத்த சில நாட்களில் பிஜேபியில் சேர முயல்வார்.
ஜோஸ்யமா? சேரட்டுமே. தோல்விக்கு பொறுப்பேற்கும் தைரியம் இருக்கே. அது போதும். பிஜேபி தலைவர்கள் ஓகே சொன்னால் தாராளமாக சேரலாம்.
நாட்டில் பஞ்சம் வரும். பல பேர் தற்கொலை செய்வார்கள்! அய்யோ, தாயே உனது முடிவை மறுபரிசீலனை செய்து எங்களை கரையேற்று!
ஹும் அடிச்ச கொள்ளை இன்னும் 100 தலைமுறைக்கு இருக்கு. இதிலே என்ன பொறுப்பு ஏற்க...எல்லாம் கபட நாடகம் ...
லல்லு முதல்வராக இருந்தபோது அவருடய மகள் மருத்துவ தேர்வை தனியறையில் எழுதியதாக செய்தி வந்தது..
கட்சியே இவரை முன்னிறுத்தி தேர்தலை சந்தித்தது போலவும் கட்சியே இவர் கட்டுப்பாட்டில் இருப்பது போலவும் கட்சியின் சீனியர் தலைவர் போலவும் தோல்விக்கு தாமே பொறுப்பேற்று கொள்வதாக சொல்லிவிட்டு அரசியலில் இருந்து விலகுவதாக அறிவிக்கிறார். இவர் பெயரையே இப்போதுதான் கேள்வி படுகிறோம்.
வடிவேலு சொன்ன நானும் ரௌடிதான் கதையாக இருக்கே
ரொம்ப சந்தோஷம். போயிட்டு வா. இல்லை இல்லை. வரவே வேண்டாம்...மேலும்
-
தமிழகத்தில் வேகம் எடுக்கும் எஸ்ஐஆர் பணிகள்; 5.90 கோடி விண்ணப்ப படிவங்கள் வினியோகம்
-
இந்தியாவுக்குள் சட்டவிரோதமாக நுழைந்த பிரிட்டனைச் சேர்ந்த இருவர் கைது
-
போலி பேராசிரியர்கள் மோசடியில் திமுகவினர் கல்லூரி மீது எப்ஐஆர் போடாதது ஏன் : அறப்போர் இயக்கம் கேள்வி
-
காங்கிரஸ் வீழ்வதில் எனக்கு பெருமையே; அது ஒரு கம்பெனி: சீமான் கடும் தாக்கு
-
அமெரிக்கர்களை ஏமாற்றிய போலி நிறுவன ஊழியர்கள் 21 பேர் பெங்களூருவில் கைது
-
வீடியோ பார்த்து கள்ள நோட்டு அச்சடித்த வாலிபர் கைது