தவெகவினருக்கு எஸ்ஐஆர் விண்ணப்ப படிவம் மறுப்பு; விஜய் புது குற்றச்சாட்டு
சென்னை: வாக்காளர் பட்டியல் தீவிர திருத்த விண்ணப்ப படிவத்தை தவெகவினருக்கு வேண்டுமென் றே ஆட்சியாளர்கள் தர மறுப்பதாக திமுக மீது தவெக தலைவர் விஜய் குற்றம்சாட்டியுள்ளார்.
அந்த வீடியோவில் அவர் கூறியதாவது; இந்திய அரசியல் சாசனம் நம் தமிழகத்தில் இருக்கும் அனைவருக்கும் கொடுத்திருக்கும் உரிமையில் மிகவும் முக்கியமானது வாக்குரிமை. ஒரு மனிதன் உயிருடன் இருப்பதற்கு அடையாளமாக இருப்பதில் அவனுடைய வாக்குரிமை ரொம்ப முக்கியம். வாக்குரிமை வெறும் உரிமை மட்டுமல்ல, நம்ம வாழ்க்கை.
தமிழகத்தில் இருக்கும் நம்ம யாருக்குமே ஓட்டுப்போடும் உரிமை இல்லை என்றால், நீங்கள் நம்புவீங்களா? நான் பயமுறுத்தவதாக நினைக்க வேண்டாம். அதுதான் நிஜமும் கூட. கொஞ்சம் ஏமாந்தால் நம்மளைப் போல லட்சக்கணக்கான பேருக்கும் இதே நிலைமை தான். ஓட்டுப்போடும் உரிமை இல்லாத மாதிரியான நிலைமை வந்தாலும் வரலாம். இதுக்கு முக்கிய காரணம் அந்த வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் தான்.
உரிமை இல்லை
கடந்த ஜனவரி மாதம் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பில், 6 கோடியே 36 லட்சம் வாக்காளர்கள் தமிழகத்தில் இருக்கிறார்கள். ஆனால், அவர்கள் யாருக்குமே இந்த ஓட்டுப்போடும் உரிமை இல்லை. பிஎல்ஓக்கள் கொடுக்கும் படிவங்களை பூர்த்தி செய்து கொடுத்தால், அதனை பரிசீலனைக்கு எடுக்கும் தேர்தல் ஆணையம், புதிய வாக்காளர் பட்டியலை வெளியிடும். அந்த வாக்காளர் பட்டியலை வெளியிடுவார்கள். அந்தப் பட்டியலில் நம் பெயர் இருந்தால் தான் நாம் ஓட்டுப்போட முடியும். அந்தப் புது பட்டியல் வரும் வரை, நாம் வாக்காளர்களாக என்பதை உறுதி செய்ய முடியாது. ஒருவேளை அந்தப் பட்டியலில் நம் பெயர் இல்லையெனில், புதிய படிவத்தை மீண்டும் பூர்த்தி செய்து கொடுக்க வேண்டும்.
சந்தேகங்கள்
புது வாக்காளர்கள் படிவம் 6 என்பதை பூர்த்தி செய்து பிஎல்ஓக்களிடம் நேரடியாக கொடுக்கலாம். ஆன்லைன் மூலம் சமர்ப்பித்தால், அதனை ஸ்கிரீன் ஷாட் எடுத்த வைத்துக் கொள்ளுங்கள். வெளிநாட்டில் இருப்பவர்கள் கூட இதனை செய்யலாம்.
இதை எல்லாம் சரியாக செய்தாலும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் மீது சில சந்தேகங்கள் உள்ளன. 6 கோடியே 36 லட்சம் வாக்காளர்களுக்கு ஒரே மாதத்தில் எப்படி விண்ணப் படிவங்களை கொடுக்க முடியும். அதிகாரிகள் வரும் போது வீட்டில் யாரும் இல்லாவிட்டால் என்ன செய்வார்கள்? இதில், பெரிதும் பாதிக்கப்படுபவர்கள் உழைக்கும் மக்கள், ஏழைகள், வேலைக்கு செல்லும் பெண்கள் தான். இவர்களுக்கு யார் சரியான பதிலை சொல்வார்கள்.
ஒரு நியாயமான வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் எப்படி நடக்க வேண்டும். இறந்து போனவர்கள், போலி வாக்காளர்களை குறிப்பிட்டு நீக்க வேண்டும். ஏற்கனவே ஓட்டு இருப்பவர்களுக்கு மீண்டும் பதிவு செய்ய வேண்டும் என்ற பெயரில் இவ்வளவு குழப்பங்கள் என்பது தான் கேள்வி? புதிய வாக்காளர்கள், ஓட்டு இல்லாதவர்களை மட்டும் சேர்த்தால் போதாதா?
2021 மற்றும் 2024ல் ஓட்டு போட்டவர்களும் இப்போது மீண்டும் பதிவு செய்வது என்பது தான் குழப்பம். இதன் காரணமாகத் தான் நாங்கள் இந்த திருத்தத்தை எதிர்க்கிறோம்.
ஆட்சியாளர்கள் தான்
புதிது புதிதாக புகார்கள் எழுகின்றன. தவெக தொண்டர்களுக்கு படிவங்கள் கொடுப்பதில்லை என்ற புகார்கள் எழுந்துள்ளன. இதை யார் செய்கிறார்கள் என்று நான் சொல்ல வேண்டியதில்லை. இப்போது இருக்கும் ஆட்சியாளர்களும், அவர்களுக்கு கைப்பாவையாக இருக்கும் சிலர் தான் இதை செய்ய தொடங்கியுள்ளனர். எனவே, இதனை சாதாரணமாக எடுத்துக் கொள்ளாதீர்கள். அனைவருக்கும் விண்ணப் படிவம் கிடைத்தாக வேண்டும். அப்படி கிடைக்காவிட்டாலும், ஆன்லைனில் இந்தப் படிவம் கிடைக்கும்.
முதல்முறை வாக்காளர்களே!
முதல்முறை வாக்காளர்களுக்கு இந்தப் படிவத்தை பூர்த்தி செய்ய உதவ வேண்டும். ஏனெனில் வரும் தேர்தலில் இவர்கள் தான் முக்கிய பங்காற்ற உள்ளனர்.எல்லா விஷயத்திலும் பிரச்னை கொடுக்கும் இவர்கள், ஓட்டு போடும் விவகாரத்தில் உத்தமராகவா இருக்கப் போறாங்க. வரும் தேர்தலில் நாம் யார் என்பதை காட்ட வேண்டும். நம் பலத்தை காட்ட வேண்டும். அதுக்காக, அந்த பலமான அதிகாரமிக்க ஆயுதமான ஓட்டு, ஜனநாயகத்தை கையில் எடுக்க வேண்டும். அது இருந்தால் தான் அந்த வெற்றியை நோக்கி நாம் பயணிக்க முடியும்.
தமிழ்நாடே அந்த வாக்குச்சாவடி முன்பு திரண்டு நிற்க வேண்டும். அதைப் பார்த்துட்டு, தமிழகமே தமிழக வெற்றிக் கழகமா? தமிழக வெற்றிக் கழகம் தான் தமிழகமா? என்பதைப் போல இருக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பத்தை பூர்த்தி செய்யும் போது சில பிரச்னைகள் வர வாய்ப்புள்ளது. உங்களின் வாக்காளர் அட்டை மற்றும் ஆதார் அட்டையில் உங்களின் பெயர் சரியாக இருந்தால் தான் பூர்த்தி செய்ய முடியும். எனவே, உஷாராக இருங்கள், இவ்வாறு அவர் கூறினார்.
விஜய்க்கு திமுக அரசியல் எதிரி.
விஜய்க்கு பிஜேபி கொள்கை எதிரி.
இதிலிருந்து நாம் புரிந்து கொள்ள வேண்டியது என்னவென்றால், விஜக்கு திமுக கொள்கை எதிரி அல்ல, மற்றும் விஜய்க்கு பிஜேபி அரசியல் எதிரி அல்ல.
கரூரில் ஓடி ஒளிந்து முக்காடிட்ட விஜய் இப்போது, எதோ ஒரு சாக்கில் மீண்டும் பேச ஆரம்பிப்பது வேடிக்கை . இப்போது இவரை பார்த்து பொது மக்கள் கேட்கும் கேள்வி " ஏன்டா நீ இன்னும் போகலையா ? "
இவர் உரையை எழுதிக்கொடுப்பது யார் ? அறிக்கை முழுவதும் ஒரே உளறல் .... இவர்பதவிக்கு எல்லாம் வந்துவிட்டால் நமக்கு "நித்ய கண்டம் பூர்ண ஆயுசு "தான்
ஆன்லைன் முறையில் மனு செய்யலாமே குறை சொல்வதை விட்டு விட்டு.
ஒரு சாதாரண பள்ளி மாணவனுக்கு படிவத்தை கொடுத்து புரிய வைத்தால் அவன் உடனடியாக பூர்த்தி செய்து விடுவான். சினி விஜய்க்கு எதிர்க்க மட்டுமே பழக்கமாகி விட்டது. வில்லன்களை எதிர்த்து சண்டை போடுவது போல. ஒவ்வொரு நாளும் ஒன்று சொல்லி அரசியல் செய்கிறார். தமிழகமே... நீ எப்போது விழித்துக் கொள்வாய்?
வர வர கமல் மாதிரி பேச ஆரம்பித்து விட்டாய். அப்போ........கமல் போல அவ்வளவு தானா?
தம்பி விஜய், கொஞ்சம் கூட்டம் சேருது அதுவும் இளம் கூட்டணை என்பதால் வாய்க்கு வந்தபடி அல்லது யோசிக்காமல் பேசாதே. அனுபவம் உள்ளவர்களுக்கு, கொஞ்சம் படிப்பறிவும் ஜனநாயகத்தின் மீது நம்பகத்தன்மையும் இருப்பவர்களுக்கு இந்த தேர்தல் சிறப்பு விழாவில் பங்கெடுக்கமுடியும். ஏன் நேர்மையான அதிகாரிகளிருந்தால் ஒரு பிரச்சினையும் இல்லை. ஒருவேளை பி எல் ஓ முரன்செய்தால் அவரை தட்டிக்கேட்கவும் முடியும். நான் என்னுடைய ஜனநாயக கடமையான என் விவரங்களை யாதொரு வில்லங்கமும் இல்லாமல் அதிகாரியிடம் சமர்பித்துவிட்டேன்.
இந்த சார் குழப்பத்தை உருவாக்குவதாக நம் முதல்வர் அதான் உங்க அங்கிள் புலம்பிக்கொண்டிருக்கிறார். அதிகாரிகளை அருகில் வைத்துக்கொண்டு இன்னும் இந்த சார் புரியவில்லையென்றால் உங்கள் அங்கிள் தமிழகத்தின் தலைகுனிவு. இப்போது தம்பி விஜய் அச்ச படுகிறார் வாக்களிக்கும் உரிமை பறிபோய்விடுமென்று. இது சினிமா விநியோக உரிமையில்லை பறிபோக. ஆகவே என்னைப்போல் அந்த விண்ணப்பத்தை வாங்கி உண்மையான விவரங்களை அதாவது உறவுகள் என்பதில் உன் பெற்றோரின் பெயர்களையும் முந்தய இரண்டாயிரத்து இரண்டில் அல்லது ஆறில் வாக்களித்திருப்பாயல்லவா அந்த விவரத்தையும் எழுது. ஒருவேளை அது கேரளா மாநிலத்திலிருந்தால் அதையும் தெரிவி. இன்னும் குழப்பத்திலிருந்தால் உன் பி.எ. விடம் பனிகொடு. சும்மா பூச்சாண்டி காட்டாதே.
தவெக தொண்டர்களுக்கு படிவங்கள் கொடுப்பதில்லை..... ஆமாங்க தளபதி, அவங்க இன்னும் ஓட்டு போடுற வயசுக்கு வரலியே
வாக்காளர் பதிவை எதிர்ப்பது பிர்போக்கான மனநிலையாக இருந்தாலும் சில முற்ப்போக்கான கருத்துகளும் இருக்கின்றன .அதனால் மக்கள் ஆர்வமுடன் விண்ணப்பம் கிடைக்கப்பெறாதவர்கள் ஆன்லைனில் பதிவேற்றம் செய்துகொள்ளவேண்டும் .பதிவை நகள் எடுத்துக்கொள்ளுங்கள் .மாதிரி வாக்காளர் பட்டியல் வெளியிடும்போது சரிபார்த்து விடுபட்டிருந்தால் சேர்த்துக்கொள்ளுங்கள் .6 கோடிக்குமேல் உள்ள வாக்காளர் பட்டியலை எப்படி ஒரே மாதத்தில் செய்துமுடிப்பார்கள் என்று கேள்வி எழுப்பி இருக்கின்றார் .இதனை ஏல்லாம் ஒருவரோ /இருவரோ செய்வதில்லை சுமார் 60,000 பேர் காலத்தில் உள்ளவர்கள் என்பது அவருக்கு தெரியாதா ? இந்த ஆறுகோடி மக்களும் 2 கோடி குடும்பங்களில் வசிக்கின்றனர் .களப்பணியாளர்கள் ஒவ்வொருவரும் சுமார் 350 குடும்பங்களைத்தான் ஒரு அதில் பார்க்கபோகின்றார்கள் .எந்த ஒரு முன்னேற்ற நடவடிக்கைக்கும் முற்ப்போக்கான மனநிலையிருந்தால்தான் வெற்றிக்கு வழிவகுக்கும் .சந்தேகங்களை விட்டொழித்து படித்த இளைஞ்சர்களையெல்லாம் யாவரும் விடுபடாமல் படிவம் பூர்த்திசெய்து காலத்தோடு சமிர்ப்பிக்க அறிவுறுத்தவேண்டும் .நீங்கள் DMK B டீமாக செயல்படவிரும்பினால் உங்கள் அரசியல்வாழ்க்கை இதோடு முடிந்துவிடும் அல்லது காங்கிரஸ் போன்று கரைந்து விடும் .இதை நன்கறிந்து தமிழ்நாட்டிற்ற்க்கு நல்லது என்றறிந்து செயல்படவேண்டும் .இன்னும் உங்கள் தகுதியை நீங்கள் பரிசோதனை செய்துகொள்ளவில்லை .நீங்கள் அல்லாமல் உங்கள் கட்சி பொதுக்கூட்டங்களை கூட்டி கூட்டங்கள் உங்களுக்காகவா அல்லது உங்கள் கட்சிக்காகவா என்பதை உறுதிசெய்துகொள்ளவேண்டும் .உங்கள் பலத்தை நீங்கள் அறியுங்கள்
இது ரோம்ப பழைய ஸ்டைலுங்குஞ் அனா ஹி ஹி புதுசா ஏதாவது யோசிங்கனா ஹா வான்க அண்ணாமேலும்
-
தமிழகத்தில் வேகம் எடுக்கும் எஸ்ஐஆர் பணிகள்; 5.90 கோடி விண்ணப்ப படிவங்கள் வினியோகம்
-
இந்தியாவுக்குள் சட்டவிரோதமாக நுழைந்த பிரிட்டனைச் சேர்ந்த இருவர் கைது
-
போலி பேராசிரியர்கள் மோசடியில் திமுகவினர் கல்லூரி மீது எப்ஐஆர் போடாதது ஏன் : அறப்போர் இயக்கம் கேள்வி
-
காங்கிரஸ் வீழ்வதில் எனக்கு பெருமையே; அது ஒரு கம்பெனி: சீமான் கடும் தாக்கு
-
அமெரிக்கர்களை ஏமாற்றிய போலி நிறுவன ஊழியர்கள் 21 பேர் பெங்களூருவில் கைது
-
வீடியோ பார்த்து கள்ள நோட்டு அச்சடித்த வாலிபர் கைது