அரியனேந்தலில் வசதி வேண்டி ஒன்றிய அலுவலகம் முற்றுகை

காரியாபட்டி: எஸ்.கல்லுப்பட்டி அரியனேந்தலில் அடிப்படை வசதிகள் கேட்டு ஒன்றிய அலுவலகத்தில் முற்றுகைப் போராட்டம் நடத்தினர்.

காரியாபட்டி எஸ்.கல்லுப்பட்டி அரியனேந்தலில் 50-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்தனர். அடிப்படை வசதிகள் முற்றிலும் இல்லாததால் பெரும்பாலானவர்கள் ஊரை காலி செய்து, வெளியூர்களுக்கு குடி பெயர்ந்தனர். ஊரை விட்டு வெளியேற முடியாத 10க்கு மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கின்றனர். குடிநீர், ரோடு, மின்விளக்கு, மயானம் என எந்த அடிப்படை வசதியும் கிடையாது.

சமீபத்தில் பெய்த மழைக்கு வீடுகளை சுற்றி மழை நீர் தேங்கி நிற்பதால் பெரிதும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். இதனால் ஆத்திரமடைந்து நேற்று ஒன்றிய அலுவலகத்திற்கு வந்து முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனர். விடுமுறை என்பதால் ஊராட்சி பி.டி.ஓ., வரவில்லை. அப்போது வந்த பி.டி.ஓ., ஜெயராமன் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்ததையடுத்து அனைவரும் கலைந்து சென்றனர்.

Advertisement