திருப்பாலைக்குடியில் மருத்துவ முகாம்

ஆர்.எஸ்.மங்கலம்: ஆர்.எஸ்.மங்கலம் அருகே திருப்பாலைக்குடியில் நலம் காக்கும் ஸ்டாலின் மருத்துவ முகாம் நடைபெற்றது. முகாமை திருவாடானை எம்.எல்.ஏ., கருமாணிக்கம் குத்து விளக்கேற்றி துவக்கி வைத்தார். பொது மருத்துவம், எலும்பு முறிவு, மகப்பேறு மருத்துவம் உள்ளிட்ட பல்வேறு நோய்களுக்கு சிகிச்சைகள் அளிக்கப்பட்டு, மாத்திரை வழங்கப்பட்டன.

சிகிச்சை பெற்ற பயனாளிகளின் பெயர் விவரங்கள் கணினியில் பதிவேற்றம் செய்யப்பட்டது. முகாமில் ஆர்.எஸ்.மங்கலம் வட்டார மருத்துவ அலுவலர் முனீஸ்வரி, பி.டி.ஓ., (கிராம ஊராட்சி) லிங்கம், வட்டார காங்., தலைவர் சுப்பிரமணியன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Advertisement