'யுனிசெப்' இந்தியா அமைப்பின் தூதராக நடிகை கீர்த்தி சுரேஷ் நியமனம்
புதுடில்லி: குழந்தைகள் உரிமைக்கான தூதராக நடிகை கீர்த்தி சுரேஷை 'யுனிசெப்' இந்தியா அமைப்பு நியமித்தது. ''யுனிசெப் இந்தியா அமைப்புடன் இணைந்து செயல்படுவதில் பெருமை அடைகிறேன்'' என கீர்த்தி சுரேஷ் சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.
யுனிசெப் என்பது ஐநாவின் குழந்தைகள் நல நிதியம். உலகின் 190 நாடுகளில் இந்த அமைப்பு செ யல்படுகிறது. மனிதாபிமான உதவி மற்றும் சுகாதார, ஊட்டச்சத்து, கல்வி, பாதுகாப்பு போன்ற உரிமைகளை குழந்தைகளுக்கு வழங்கவும், வலியுறுத்தவும் இந்த அமைப்பு பாடுபடுகிறது. இதன் இந்திய பிரிவின் சார்பில், ஏற்கனவே சினிமா பிரபலங்கள் பலர் தூதர்களாக நியமிக்கப்பட்டு உள்ளனர். தற்போது, நடிகை கீர்த்தி சுரேஷ் தூதராக நியமிக்கப்பட்டு உள்ளார்.
தமிழ், தெலுங்கு, மலையாளம் என பல மொழிகளில் நடித்துள்ள கீர்த்தி சுரேஷ் சிறந்த நடிக்கை க்கான தேசிய விருது பெற்றவர். இது குறித்து கீர்த்தி சுரேஷ் கூறுகையில், ''குழந்தைகள் தான் நமது மிகப்பெரிய எதிர்க்கால நம்பிக்கை, அவர்கள் மீது அன்பு செலுத்தி சிறந்தவர்களாக உருவாக்குவதற்கு தேவையான அடித்தளத்தை மேம்படுத்த வேண்டியது நமது கடமை. யுனிசெப் இந்தியா அமைப்புடன் இணைந்து செயல்படுவதில் பெருமை அடைகிறேன், என்றார்.
அதானே திராவிட உபி தான் பொருத்தமானவர்
யூனிசெப் மூலமாக பல்வேறு நலத்திட்டங்கள் உலகெங்கும் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.. ஆனால் இந்தியாவில் நடிகைகளை தூதராக நியமித்து மகிழ்ந்து வரும் அவலம் .. ஒவ்வொரு ஆண்டும் எத்தனை பேர் , எந்தெந்த திட்டங்களால் ,எங்கு , எப்படி பயன் பெறுகிறார்கள் என்பதை இது போன்ற .. பொதுவெளியில் அனைவரும் அறிந்து கொள்ளும் வகையில் செயல்படுத்த அறிவுறுத்துவார்களா??? இல்லை பெயருக்கு மட்டும் தானா ??மேலும்
-
ப்ளூ ப்ரின்ட் எப்போது... பீஹாரில் ஆட்சியமைப்பது குறித்து சிராக் பாஸ்வான் சொன்ன தகவல்
-
ராஜஸ்தானில் வேன்- லாரி மீது மோதி விபத்து; 6 பேர் பரிதாப பலி
-
பட்டியல் ஜாதியினருக்கான இடஒதுக்கீட்டில் கிரீமிலேயர் விலக்கப்படுவதை ஆதரிக்கிறேன்; தலைமை நீதிபதி கவாய் உறுதி
-
ராகுல் கூறிய ஓட்டு திருட்டு புகாருக்கு ஆதாரம் இல்லை; போட்டு உடைத்தார் காங்கிரஸ் தலைவர் ஷக்கீல் அகமது
-
தைவானுக்கு ஆதரவாக ஜப்பான் பிரதமரின் கருத்து; சீறிய சீனாவால் பரபரப்பு
-
செம்மொழி பூங்காவை திறக்க அரசு அவசரம்: நெருக்கடிக்கு இடையே வேலைபார்க்கும் அதிகாரிகள்