போட்டியிட்ட 98 சதவீதம் தொகுதிகளில் டெபாசிட் பறிபோனது: பிரசாந்த் கிஷோர் கட்சிக்கு ஷாக்
புதுடில்லி: பீஹார் தேர்தலில் பிரசாந்த் கிஷோரின் ஜன் சுராஜ் கட்சி போட்டியிட்ட 98 சதவீத இடங்களில் டெபாசிட் இழந்தது என்பது தெரியவந்துள்ளது.
பீஹார் சட்டசபை தேர்தலில் பிரசாந்த் கிஷோர் தலைமையிலான ஜன் சுராஜ் கட்சி மிகப்பெரிய சரிவைச் சந்தித்தது. புதிதாக களத்தில் குதித்த கட்சிக்கு, 18 லட்சத்திற்கும் குறைவான ஓட்டுக்கள் மட்டுமே கிடைத்தது. இது மொத்தம் பதிவான ஓட்டுக்களில் 3.44 சதவீதம் ஆகும். அது போட்டியிட்ட 238 இடங்களில் 236 இடங்களில் டெபாசிட் இழந்தது.
98 சதவீத இடங்களில் டெபாசிட் இழந்தது அக்கட்சியின் தலைவர் பிரசாந்த் கிஷோருக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது. இந்திய தேர்தல் கமிஷனின் தரவுகளின் படி, ஜன் சுராஜ் கட்சி ஒரு இடத்தில் மட்டுமே இரண்டாவது பிடித்திருக்கிறது. 126 தொகுதிகளில் மூன்றாவது இடத்தைப் பிடித்தது. 54 இடங்களில் இந்த கட்சி நோட்டாவை விட குறைவாக ஓட்டுகளை பெற்றுள்ளது.
சன்பதியா (37,172) மற்றும் ஜோகிஹாட் (35,354) உள்ளிட்ட இடங்களில் 35,000க்கும் மேற்பட்ட ஓட்டுகளை பெற்று ஜன் சுராஜ் கட்சி மூன்றாவது இடத்தைப் பிடித்தது. ரகுநாத்பூர் (3,071), அத்ரி (3,177), மானெர் (3,980) உள்ளிட்ட இடங்களில் 3000க்கும் குறைவான ஓட்டுகளை பெற்று மூன்றாவது இடத்தைப் பிடித்தது.
மர்ஹௌராவில் மட்டும் 58,190 ஓட்டுக்களுடன் இரண்டாவது இடத்தைப் பிடித்து இருக்கிறது.
இந்தத் தொகுதியில் ஆர்ஜேடி கட்சி வேட்பாளர் 86,118 ஓட்டுகள் பெற்று வெற்றி பெற்றார். போட்டியிட்ட மீதமுள்ள 111 இடங்களில், ஜன் சுராஜ் கட்சி நான்காவது இடம் அல்லது அதற்கும் குறைவான இடங்களுக்கு பின் தங்கி உள்ளது. பிப்ராவில், ஜன்சுராஜ் கட்சி 5,519 ஓட்டுக்களை பெற்றது. அதே நேரத்தில் நோட்டா 10,691 ஓட்டுக்களை பெற்றது.
பிரசாந்த் கிஷோருக்கு அடுத்து என்ன?
பீஹாரில் தனது மூன்று ஆண்டு பிரசாரத்தின் போது, மாநிலத்தின் ஒவ்வொரு மூலை முடுக்கிற்கும் பயணம் செய்து, ஜாதி அரசியலை ஒழித்து, வேலைவாய்ப்புகளை கொண்டு வருவதாக பிரசாந்த் கிஷோர் உறுதியளித்தபோது, நிறைய வாக்குறுதிகளை அளித்திருந்தார். ஆனால் அந்த வாக்குறுதிகள் ஏதும் கை கொடுக்கவில்லை.
இந்த முறை போட்டியிட்ட 101 இடங்களில் 89 இடங்களை பாஜ வென்றது. தேர்தலுக்கு முன்னதாக, நிதிஷ் குமார் அரசு, 1.25 கோடி பெண் வாக்காளர்களின் வங்கி கணக்குகளுக்கு ரூ.10 ஆயிரம் வரவு வைத்தது. இது தான் தேஜ கூட்டணி அரசு மீண்டும் ஆட்சிக்கு வருவதில் முக்கிய பங்கு வகித்தது என சர்வதேச அரசியல் வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.
கடைசியாக நீங்களே ஒத்துக்கொள்கிறீர்கள் பார்த்தீர்களா? லஞ்சத்தை தவிர் என்று சொல்லிவிட்டு லஞ்சத்தை கொடுத்து ஆட்சியைப் பிடித்திருக்கிறார்கள்.
அரசியல் கட்சி ஆரம்பித்து நடத்த, ஆட்சியில் அமர பொது சேவை செய்ய வேண்டும். முன்பு சேவை செய்வதற்கு மட்டும் கட்சியை நடத்திய காலம் இருந்தது. இப்போது யாரும் சேவையை மட்டும் செய்துவிட்டு இன்னொரு கட்சி ஆட்சியில் அமர விரும்ப மாட்டார்கள். அதாவது தேன் எடுத்தவன் புறங்கையை நக்காமல் விடமாட்டான். இப்போது அரசியல் கட்சி நடத்த ஐம்பது, அறுபது சினிமாவில் நல்லவன் போல் ஹீரோ வேஷம் போட்டு நடித்தால் போதும், இன்னொரு கட்சிக்கு ஆலோசனை சொல்பவறாக இருந்த அனுபவம் போதும் என்று நினைக்கிறார்கள்.
பிஹார் தேர்தல் ரிசல்ட்டைப் பார்க்கும் போது நிறைய அதிசயங்கள்:
தன்னுடைய ஜாதகத்திற்கு ஒருவர் பார்க்கும் ஜோசியம் பலிக்காது என்பது ஒரு பழஞ்சொல். இது பிரசித்தி பெற்ற தேர்தல் வியூக வகுப்பாளரான பிரசாந்த் கிஷோர் அவர்களுக்கும் பொருந்தும்.
நேற்று முன்தினம் டிவி சேனல்களில் பிஹார் ரிசல்ட்டை ஒளிபரப்பும் போது, உள்ளூர் திமுக காரங்களுக்கு ஏன் பல்லெல்லாம் கொட்டியது? என்று புரியவில்லை.
இனி எந்த கட்சியும் புதிய்ச்சொல்லா கூப்பிட மாட்டான் ஸ்டாலினை தவிர
இவரது கட்சியின் வெற்றியை இவரால் கணிக்க முடியவில்லை என்றால், இனிமேல் இவர் அரசியல் கணிப்புவேலையை விட்டு விட்டு போஸ்டர் ஒட்ட போனால் போதும்.
சோசப் விஜய், செபாஸ்தியான் சீமான் போன்ற கிறித்தவ ஏஜன்டுகளுக்கும் இதே நிலை தான் …மேலும்
-
ப்ளூ ப்ரின்ட் எப்போது... பீஹாரில் ஆட்சியமைப்பது குறித்து சிராக் பாஸ்வான் சொன்ன தகவல்
-
ராஜஸ்தானில் வேன்- லாரி மீது மோதி விபத்து; 6 பேர் பரிதாப பலி
-
பட்டியல் ஜாதியினருக்கான இடஒதுக்கீட்டில் கிரீமிலேயர் விலக்கப்படுவதை ஆதரிக்கிறேன்; தலைமை நீதிபதி கவாய் உறுதி
-
ராகுல் கூறிய ஓட்டு திருட்டு புகாருக்கு ஆதாரம் இல்லை; போட்டு உடைத்தார் காங்கிரஸ் தலைவர் ஷக்கீல் அகமது
-
தைவானுக்கு ஆதரவாக ஜப்பான் பிரதமரின் கருத்து; சீறிய சீனாவால் பரபரப்பு
-
செம்மொழி பூங்காவை திறக்க அரசு அவசரம்: நெருக்கடிக்கு இடையே வேலைபார்க்கும் அதிகாரிகள்