தொழிற்சாலையில் தீ விபத்து: இரு தொழிலாளர்கள் படுகாயம்

திருவள்ளூர்: திருவள்ளூர் அடுத்த காக்களூர் தொழிற்பேட்டையில், 'விநாயகா மெட்டல் ஒர்க்' என்ற தனியார் தொழிற்சாலை இயங்கி வருகிறது. இங்கு, இரவு - பகல் என, 40க்கும் மேற்பட்ட பணியாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.

நேற்று முன்தினம் இரவு வடமாநிலத்தைச் சேர்ந்த நான்கு பணியாளர்கள் பணி செய்து கொண்டிருந்தனர். அப்போது, தொழிற்சாலையில் இருந்த சிலிண்டர் திடீரென வெடித்து தீ விபத்து ஏற்பட்டது.

இதில், அங்கு பணியிலிருந்த உத்தர பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த சிவகுமார், 22 மற்றும் இந்திரபூசன், 35, ஆகிய இருவரும் படுகாயமடைந்தனர்.

இதையடுத்து, திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் முதலுதவிக்கு பின், சென்னை ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். இதுகுறித்து, திருவள்ளூர் தாலுகா போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Advertisement