புதுச்சேரிக்கு ஆரஞ்சு 'அலர்ட்'
புதுச்சேரி: புதுச்சேரிக்கு ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளதால், தேவையின்றி மக்கள் வெளியே வர வேண்டாம் என மாவட்ட நிர்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
வங்க கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வுநிலை காரணமாக புதுச்சேரியில் இன்று கனமழை மற்றும் அதி கனமழை பெய்யக்கூடும் எனவும்,மணிக்கு55 கிலோ மீட்டர் வரை காற்று வீசக்கூடும் எனவும் வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. மேலும், புதுச்சேரிக்கு ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள து.
இதன் காரணமாக, பொதுமக்கள் அனைவரும் பாதுகாப்பாக இருக்க வேண்டும். கனமழை தொடர்பான புகார்களுக்கு 1077, 1077, 112 அல்லது 9488981070 என்ற எண்ணில் வாட்ஸ் ஆப் மூலம் தெரிவிக்கலாம் என, கலெக்டர் குலோத்துங்கன் தெரிவித்துள்ளனர்.
மேலும், மீன்வளத் துறை எச்சரிக்கையை தொடர்ந்து, மீனவர்கள் யாரும் கடலுக்கு செல்லாமல், தங்களது விசைப் படகுகளை தேங்காய்திட்டு துறைமுக வளாகத்தில் பாதுகாப்பாக நிறுத்தி வைத்தனர்.
மீனவர்களுக்கு எச்சரிக்கை காரைக்கால் மீனவர்கள் மறு அறிவிப்பு வரும் வரை கடலுக்கு செல்ல வேண்டாம். கடலுக்கு மீன் பிடிக்க சென்ற மீனவர்களும் உடனடியாக கரைக்கு திரும்ப வேண்டும் என, மீன்வளத்துறை துணை இயக்குநர் எச்சரித்துள்ளார்.
மேலும்
-
ஏழு மாவட்டங்களில் இன்று மிக கனமழை: தமிழகம் நோக்கி நகருது காற்றழுத்த தாழ்வு
-
அரசுப்பள்ளி மாணவர்கள் கற்றலில் பின்னடைவு! புலம்பெயர் மாணவர்கள் காரணமாம்!
-
கோடை பின்னலாடை ஆர்டர்கள் கைகூடும்: உதவிக்கரம் நீட்டிய மத்திய அரசு
-
ராணுவ முகாமில் இயற்கை மீட்புக்கு முயற்சி! 1,000 சோலை மரக்கன்று நடவு பணி
-
பீஹார் தேர்தல் வெற்றி: நிதிஷ் நீடிக்க ஆதரவு!
-
இட ஒதுக்கீடு போராட்டம் பா.ம.க.,வினர் ஆலோசனை