இட ஒதுக்கீடு போராட்டம் பா.ம.க.,வினர் ஆலோசனை

ஓமலுார்: பா.ம.க.,வின், அன்புமணி ஆதரவு, சேலம் மேற்கு மாவட்ட செயற்குழு கூட்டம், ஓமலுார் அருகே நேற்று நடந்தது.

மாவட்ட தலைவர் மாணிக்கம் தலைமை வகித்தார். அதில் மேட்டூர் எம்.எல்.ஏ., சதாசிவம் பேசினார். தொடர்ந்து தேர்தல் பணி, டிச., 17ல் அன்புமணி தலைமையில் நடக்க உள்ள, இட ஒதுக்கீடு சிறை நிரப்பும் போராட்டம் குறித்து ஆலோசனை நடந்தது. தர்ம-புரி முன்னாள் எம்.எல்.ஏ., வேலுசாமி, சேலம் மாவட்ட முன்னாள் கவுன்சிலர் அண்ணாமலை உள்ளிட்ட நிர்வாகிகள் பங்-கேற்றனர்.

Advertisement