இயற்கையை பாதுகாக்க வலியுறுத்தி சைக்கிள் பயணம்

புதுச்சேரி: இயற்கையை பாதுகாக்க வலியுறுத்தி, சைக்கிளில் பசுமை பயணம் மேற்கொண்டவர்கள், புதுச்சேரியில், மரக்கன்றுகள்நட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

கன்னியாகுமரியில் இருந்து சென்னைக்கு 20 பேர் கொண்ட சைக்கிள் வீரர்கள் இயற்கையை பாதுகாப்பது குறித்து, விழிப்புணர்வு ஏற்படுத்தி, பசுமை பயணமாக புறப்பட்டனர். இயற்கையை காப்போம், வாழ்வுரிமையை மீட்போம் என்பதை வலியுறுத்தி ஒவ்வொரு மாவட்டத்திற்கும் சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.அதன் தொடர்ச்சியாக கடலுாரில் இருந்து நேற்று முன்தினம் புதுச்சேரி புனித அந்தோணியார் உயர்நிலைப் பள்ளிக்கு வந்தனர். அவர்களுக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது.அவர்கள், துாய இதய மேனிலைப் பள்ளி, புனித அந்தோணியார் உயர்நிலைப்பள்ளி மாணவர்கள் மற்றும் மனிதவள மேம்பாட்டு மையக் குழுவினர் கலை நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

பசுமை பயணம் செய்யும் இவர்கள் மரக்கன்றுகள் நட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தினர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை புனித அந்தோணியார் உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் கிரேசி ஆரோக்கியமரி செய்திருந்தார்.

Advertisement