'மிஷன் வீரமங்கை' தற்காப்பு கலை பயிற்சி முகாம் நிறைவு
திருக்கனுார்: புதுச்சேரி போலீஸ் மற்றும் கல்வித்துறை சார்பில் சீனியர் எஸ்.பி., ஈஷா சிங் ஏற்பாட்டில் 'மிஷன் வீரமங்கை' தற்காப்பு கலை பயிற்சி முகாம் வாதானுார் சாரதாதேவி அரசு உயர்நிலைப் பள்ளியில் நடந்தது
10 நாட்கள் நடந்த முகாமில் 6 முதல் 8ம் வகுப்பு வரை பயிலும் மாணவிகள் 50 பேர் பங்கேற்று பயிற்சி பெற்றனர்.
உதவி சப் இன்ஸ்பெக்டர் மோகன், மகளிர் போலீஸ் ஆனந்தி, ஊர்காவல் படை வீரர்கள் பவதாரணி, கமலி, அவினா ஆகியோர் பயிற்சி அளித்தனர்.
முகாம் நிறைவு விழா பள்ளி வளாகத்தில் நடந்தது. தலைமை ஆசிரியர் வீரய்யன் தலைமை தாங்கினார். ஆசிரியர் பாலகுமார் வரவேற்றார். விழாவில், திருக்கனுார் சப் இன்ஸ்பெக்டர் பிரியா கலந்து கொண்டு, தற்காப்பு கலை பயிற்சி பெற்ற மாணவிகளுக்கு சான்றிதழ் வழங்கி, பேசினார்.
பெற்றோர் ஆசிரியர் சங்க கவுரவத் தலைவர் மீனாட்சிசுந்தரம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
தொடர்ந்து, பயிற்சி பெற்ற மாணவிகள், தற்காப்பு கலை செயல் விளக்கம் அளித்தனர்.
மேலும்
-
ஏழு மாவட்டங்களில் இன்று மிக கனமழை: தமிழகம் நோக்கி நகருது காற்றழுத்த தாழ்வு
-
அரசுப்பள்ளி மாணவர்கள் கற்றலில் பின்னடைவு! புலம்பெயர் மாணவர்கள் காரணமாம்!
-
கோடை பின்னலாடை ஆர்டர்கள் கைகூடும்: உதவிக்கரம் நீட்டிய மத்திய அரசு
-
ராணுவ முகாமில் இயற்கை மீட்புக்கு முயற்சி! 1,000 சோலை மரக்கன்று நடவு பணி
-
பீஹார் தேர்தல் வெற்றி: நிதிஷ் நீடிக்க ஆதரவு!
-
இட ஒதுக்கீடு போராட்டம் பா.ம.க.,வினர் ஆலோசனை