மரவள்ளி, வாழை பயிருக்கு காப்பீடு செய்ய விவசாயிகளுக்கு அழைப்பு


கரூர், கரூர் வட்டார விவசாயிகள் மரவள்ளி கிழங்கு மற்றும் வாழை பயிர்களுக்கு காப்பீடு செய்யலாம் என, தோட்டக்கலை உதவி இயக்குனர் ஜெகன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து, அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:

கரூர் வட்டாரத்தில் மரவள்ளி கிழங்கு, வாழை பயிர்களுக்கு காப்பீடு செய்வதன் மூலம், இயற்கை பேரிடர் காலங்களில் நிவாரணம் பெற முடியும்.

பிரதமர் பயிர் காப்பீடு திட்ட த்தின் மூலம் ரபி, 2025- 26 பருவத்திற்கு பயிர் காப்பீடு செய்யலாம்.
மண்மங்கலம், புகழூர், வாங்கல் பகுதியை சேர்ந்த விவசாயிகள், ஒரு எக்டர் மரவள்ளி கிழங்குக்கு, 4,908 ரூபாய் செலுத்த வேண்டும். ஒரு எக்டர் வாழை பயிருக்கு 4,863 ரூபாய் செலுத்த வேண்டும்.
அடுத்த ஆண்டு பிப்., 28க்குள் காப்பீடு தொகை செலுத்த வேண்டும்.
விவசாயிகள் அருகில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கம், தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள், பொது சேவை மையத்தில் காப்பீடு தொகையை செலுத்தலாம்.
இவ்வாறு, அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Advertisement