டி.என்.பி.எஸ்.சி., தேர்வு பயிற்சி வகுப்பு வரும் 20ல் தொடக்கம்


கரூர், டி.என்.பி.எஸ்.சி., குரூப் 2, குரூப் 2ஏ தேர்வுக்கு பயிற்சி வகுப்பு வரும், 20 முதல் தொடங்குகிறது.
இது குறித்து, கலெக்டர் தங்கவேல் வெளியிட்ட அறிக்கை:

கரூர் வெண்ணைமலையில் உள்ள, மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தால், (டி.என்.பி.எஸ்.சி.,) நடத்தப்படும் குரூப் 2 மற்றும் குரூப் 2ஏ ஆகியவற்றிக்கு முதன்மை தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்பு வரும், 20 முதல் தொடங்கப்படவுள்ளது. பயிற்சி வகுப்புகளில் ஸ்மார்ட் போர்டு, நுாலக வசதி, பயிற்சி கால அட்டவணை, நாள்தோறும் சிறுதேர்வு, வாராந்திர தேர்வு, இணைய வழித்தேர்வு, முழு மாதிரி தேர்வு, கணிணி வசதியுடன் பயிற்சி வகுப்பு நடத்தப்பட்டு வருகிறது.

இதில் கலந்து கொள்ள, 2 பாஸ்போர்ட் சைஸ் போட்டோவுடன், அலுவலகத்திற்கு நேரில் வருகை புரிந்து முன்பதிவு செய்து கொள்ளலாம். விபரங்களுக்கு, 94990- 55912 என்ற மொபைல் எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement