மாநில அளவிலான கராத்தே கரூருக்கு 23 பதக்கங்கள்



கரூர், மதுரையில் நடந்த, மாநில அளவிலான கராத்தே போட்டியில், கரூர் மாவட்டத்தை சேர்ந்த வீரர், வீராங்கனைகள், 23 பதக்கங்களை பெற்றனர்.

மதுரை மாவட்டம் திருமங்கலத்தில், 39வது மாநில அளவிலான கராத்தே போட்டி கடந்த, 15ல் நடந்தது. அதில், பங்கேற்ற கரூர் மாவட்டத்தை சேர்ந்த வீரர், வீராங்கனைகள், 10 தங்கப்பதக்கம், 8 வெள்ளி பதக்கம், 5 வெண்கல பதக்கம் உள்பட, 23 பதக்கங்களை பெற்றனர்.
வெற்றி பெற்ற வீரர்களை, கரூர் மாவட்ட கராத்தே சங்க செயலாளர் ராஜசேகரன், பயிற்சியாளர்கள் செந்தில் குமார், ரமேஷ் உள்பட பலர் பாராட்டினர்.

Advertisement